சிவாஜி வீட்டிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்த குஷ்பூ.. ஸ்வீட் ஷாக்கான பிரபு குடும்பத்தினர்!

சென்னை : பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பூ, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

kushbhu visit shivaji ganeshan house and meet prabhu family

இந்த நிலையில் இன்று திடீரென குஷ்பூ நடிகர் திலகம் திவாஜி கணேசன் வீட்டிற்கு சென்றார். குஷ்பூவின் இந்த திடீர் வருகையை எதிர்பாராத பிரபு குடும்பத்தினர் ஷாக்காகி நின்றனர். சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், சமீபத்தில் பாஜக.,வில் இணைந்தார்.

kushbhu visit shivaji ganeshan house and meet prabhu family

இதனால் ராம்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி விட்டு, அவரிடம் ஆசிர்வாதம் பெற்று செல்லவே வந்ததாக குஷ்பூ கூறினார். தொடர்ந்து பிரபு மற்றும் ராம்குமார் குடும்பத்தினருடன் குஷ்பூ போட்டோ எடுத்துக் கொண்டார்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KHUSHBOO CHAT PART-04 | AMITABH BACHCHAN தான் என்னோட CRUSH | FILMIBEAT TAMIL

இந்த போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் குஷ்பூ வெளியிட்டார். இந்த படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற காதல் ஜோடி என கிசுகிசுக்கப்பட்டது பிரபு-குஷ்பூ ஜோடி.

இவர்கள் இருவரும் காதலித்து, திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக குஷ்பூ, டைரக்டர் சுந்தர்.சி.,யை காதலிப்பதாக கூறி, திருமணமும் செய்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X