»   »  இன்னொரு புது சிக்கலில் குஷ்பு

இன்னொரு புது சிக்கலில் குஷ்பு

Subscribe to Oneindia Tamil

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடிகை குஷ்பு நடித்துள்ள விளம்பரத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவிடம் ரவிக்குமார் என்ற வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளார்.

தனது புகா>ல், கடந்த 21ம் தேதி காலை 8.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பான பாட்டுக்குப் பாட்டு என்றநிகழ்ச்சியைப் பார்த்தேன். நிகழ்ச்சிக்கு இடையே லலிதா ஜூவல்லரி நிறுவனத்தின் விளம்பரம் ஒளிபரப்பானது.

அதில் நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டு லலிதா ஜூவல்லரியின் சலுகைகள்குறித்து விளக்குகிறார். அதைக் கேட்டதும் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் அப்படியே காணாமல் போவது போல,அதாவது நீதிமன்றமே காலியாகி விடுவதைப் போல காட்டினார்கள்.

இந்த விளம்பரம் நீதித்துறை, நீதிபதிகள், வழக்கறிஞர்களைக் கேவலப்படுத்துவது போல உள்ளது. எனவே இந்தவிளம்பரம் மீண்டும் ஒளிபரப்பப்படாமல், தடை விதித்து நடவடிக்கை எடுக்க வண்டும் என்று கூறியுள்ளார்ரவிக்குமார்.

நீதிமன்றத்தில் சரண்டர்:

இந் நிலையில் குஷ்புவின் அண்ணனின் மாமனார் தொடர்ந்துள்ள வழக்கில், சென்னை உயர்நீதிமன்றஉத்தரவுப்படி, எழும்பூர் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் குஷ்பு சரணடைந்து முன் ஜாமீன் பெற்றார்.

குஷ்புவின் அண்ணன் அப்துல்லா கான். இவர் சினிமாவில் நடிக்க விரும்பியதையடுத்து கோலிவுட்டில் அவரைகளமிறக்கிப் பார்த்தார் குஷ்பு. தம்பி தேறவில்லை.

இதையடுத்து கர்நாடகத்தில் உள்ள தனது திரையுலக தொடர்புகளை வைத்து அவரை கன்னட சினிமாவுக்குஅனுப்பி வைத்தார். அங்கு அப்துல்லா கான் தானே ஒரு படத்தை தயாரிக்கும் வேலையில் இறங்கினார்.

இதற்காக தனது மாமனார் வர்கீஸிடம் ரூ. 8 லட்சம் கடன் பெற்றிருந்தார். இதற்கு குஷ்பு ஜாமீன்தாரராககையெழுத்துப் போட்டிருந்தார். இந்த கடனுக்காக பெங்களூரில் உள்ள தனது பிளாட் ஒன்றை தம்பி பெயரில்பவர் ஆப் அட்டர்னி போட்டுத் தந்தார் குஷ்பு.

ஆனார் அப்துல்லா கான் மாமானாரிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை. படத்தையும் எடுத்துமுடிக்கவில்லை. இதையடுத்து குஷ்புவின் பிளாட்டை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டார். அதை குஷ்புஏற்கவில்லை.

இதையடுத்து குஷ்பு மீது சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வர்கீஸ்.

பண மோசடி என்பதால் இந்த வழக்கில் குஷ்பு கைதாக இருந்தார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் குஷ்பு முன்ஜாமீன் கோரி மனு தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை எழும்பூர் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன்பெறலாம் என அறிவுறுத்தியது. இதையடுத்து இன்று குஷ்பு எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகன்னாதன் முன்புசரணடைந்து முன் ஜாமீன் பெற்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil