»   »  குஷ்பு, கூடவே கூடாது...

குஷ்பு, கூடவே கூடாது...

Subscribe to Oneindia Tamil

தமிழக அரசு நிதியுதவியுடன் எடுக்கப்படும் பெரியார் படத்தில் குஷ்பு நடிக்கஅனுமதிக்கக் கூடாது என்று சட்டசபையில் பாமக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாமக உறுப்பினர் வேல்முருகன் பேசுகையில், தமிழக அரசின்நிதியுதவியுடன் எடுக்கப்பட்டு வரும் பெரியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்அவரது மனைவி மணியம்மை வேடத்தில் ஒரு நடிகை நடிக்கவிருப்பதாகக்கூறப்படுகிறது.

அந்த நடிகை சில மாதங்களுக்கு முன் தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து இழிவாகப்பேசி தமிழக கலாச்சாரத்தையும், பெண்களையும் கேவலப்படுத்தினார். தமிழகமக்களின் கடும் கண்டனத்துக்கு ஆளானார். அப்படிப்பட்ட நடிகை, மணியம்மைவேடத்தில் நடிப்பதை ஏற்க முடியாது.

தமிழக அரசு இந்தப் படத்திற்கு நிதியுதவி செய்வதால் அந்த நடிகையை மணியம்மைவேடததில் நடிக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரினார். இதற்கு செய்தி,ஒளிபரப்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பதிலளிக்கையில்,

அந்த நடிகை குறித்து வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுகுறித்து கருத்துதெரிவிக்க இயலாது என்றார்.

ஆனால் வேல்முருகன் தொடர்ந்து பேசுகையில, அப்படி ஒருவேளை அந்த நடிகைநடிப்பதாக இருந்தால், தமிழக அரசு தனது நிதியுதவியை திரும்பப் பெற வேண்டும்என்றார்.

அப்போது பேசிய பரிதி இளம்வழுதி, நடிப்பை மட்டும் பாருங்கள். நடிகையைப் பற்றிஏன் கவலைப்படுகிறீர்கள் என்றார்.இந்தப் படத்தில் நாகம்மை கேரக்டரில் குஷ்பு ரெக்கமண்டேசனுடன் ஜோதிர்மயிநடித்துக் கொண்டுள்ளார். மணியம்மை கேரக்டரைப் பிடிக்க குஷ்பு தீவிரமாக உள்ளார்.

துணை நகரத்துக்கு எதிர்ப்பு:

அதே போல காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் 44 கிராமங்களில் விவசாயநிலங்களை கையகப்படுத்தி சென்னை துணை நகரம் அமைக்கும் தமிழக அரசின்முடிவையும் பாமக கடுமையாக எதிர்த்துள்ளது.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறுகையில்,

இந்தத் திட்டத்தை தமிழக அரசு கைவிடாவிட்டால் விவசாயிகளைத் திரட்டி பாமகசிறை நிரப்பும் போராட்டம் நடத்தும். விவசாயிகள் நலனுக்காக எந்த தியாகத்தையும்செய்ய பாமக தயார்.

மக்களுக்காக துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகவும் பாமக எம்பி, எம்எல்ஏக்கள்தயார் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil