Kushboo: சத்யராஜ் பற்றி 'ஓபனா' சொல்ல முடியாது... கார்த்திக் வேஸ்ட் எதுவுமே பண்ணல: குஷ்பூ சீக்ரெட்ஸ்!
சென்னை: 90களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் குஷ்பூ.
ரசிகர்களின் கனவுக் கன்னியாக கொண்டாடப்பட்ட குஷ்பூ, கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு நடிகை குஷ்பூ பேட்டியளித்திருந்தர்.
அப்போது நடிகர்கள் சத்யராஜ், கார்த்திக் இருவருடன் நடித்தது குறித்தும் அவர்களின் ரகசியம் பற்றியும் குஷ்பூ ஓபனாக பேசியுள்ளார்.

குஷ்பூவின் சீக்ரெட்ஸ்
சில தினங்களுக்கு முன்னர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குஷ்பூ, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். அதனையடுத்து தற்போது வீடு திரும்பியுள்ள அவர், ஒரு வாரம் வரை பெட் ரெஸ்ட்டில் இருக்கப் போவதாக ட்வீட் செய்துள்ளார். இதனிடையே பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த குஷ்பூ, சில ரகசியங்களை ஓபனாக பேசியுள்ளார்.

வருஷம் 16 என்ற படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்திருந்தார் குஷ்பூ. இந்தப் படம் குஷ்பூவின் ஆரம்ப காலத்தில் மிகப் பெரிய கம்பேக்காக அமைந்தது. வருசம் 16 கொடுத்த சூப்பர் ஹிட்டால் கார்த்திக் - குஷ்பூ காம்போ ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறிவிட்டது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் கார்த்திக் ஜோடியாக நடித்துள்ளார் குஷ்பூ. இந்நிலையில், கார்த்திக் குறித்து பேசியுள்ள குஷ்பூ, அவர் வேஸ்ட் என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, "மற்றவர்களுக்கு தான் அவர் கார்த்திக், எங்களுக்கு முரளி. நடிகர் என்பதை கடந்து கார்த்திக் பற்றி இங்கே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சோம்பேறித்தனத்தின் உச்சம் என்றால் கார்த்திக்கைக் கூறலாம். சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட் வர மாட்டார். ரொம்ப சீரியஸான நேரங்களில் கூட சிரித்துக் கொண்டே இருந்து மற்றவர்களை கடுப்பேற்றிவிடுவார்.
படப்பிடிப்பில் சீரியஸான சீன் எடுத்துக் கொண்டிருக்கும் போதும் கார்த்திக் அங்கிருந்து நம்மை சிரிக்க வைக்க சேட்டைகள் செய்துகொண்டே இருப்பார். ஆனாலும், எங்களது நட்பு சண்டையில்தான் ஆரம்பித்தது. அவருக்கு என்னை சைனீஸ் பட்லர் என்று அழைப்பது தான் வழக்கம். கார்த்திக்கிடம் இருக்கும் ஒரே குறை சோம்பேறித்தனம் தான். ஆனால், கார்த்திக் ஒரு வேஸ்ட் தான், என்னை கவர்வதற்காக அவர் எதுவுமே செய்தது கிடையாது என சிரித்துக்கொண்டே கூறினார்.

அதேபோல், நடிகர் சத்யராஜ் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக சத்யராஜ் பற்றி மற்றவர்களுக்கு தெரியாத பல விஷயங்கள் எனக்குத் தெரியும். ஆனால் அதை இங்கே வெளிப்படையாக சொல்ல முடியாதே என டிமிக்கி கொடுத்துள்ளார். மேலும், சுஹாசினி பற்றி பேசிய குஷ்பூ, அவர் ரொம்ப எமோஷனலான பர்சன், எளிதாக வருத்தம் அடைந்து விடுவார் என்றார். அதேபோல், அரவிந்த்சாமியை பற்றி சொல்வதற்கு எந்த ரகசியமும் கிடையாது எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











