twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்படின்னா தியேட்டருக்கு வராதீங்க-குஷ்பு.. மக்களை பத்தி கவலைப்படறேன்-கஸ்தூரி.. ட்விட்டர் டிஷ்யூம்!

    By
    |

    சென்னை: தியேட்டரில் நூறு சதவிகித இருக்கைக்கு அரசு அனுமதி அளித்ததை அடுத்து குஷ்புவும் கஸ்தூரியும் ட்விட்டரில் மோதியுள்ளனர்.

    Recommended Video

    என்னது…? தனிமனித இடைவெளி இல்லையா..? தியேட்டர்கள் ஓபன்.. அதிரும் சுகாதார நிபுணர்கள்..!

    திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு சில மாதங்களுக்கு முன் அனுமதி அளித்திருந்தது.

    ஹஸ்க்கி வாய்ஸில்.. ரியோவை ரகசியமாக கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ்.. செம ஃபார்ம்ல இருக்காரு போல! ஹஸ்க்கி வாய்ஸில்.. ரியோவை ரகசியமாக கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ்.. செம ஃபார்ம்ல இருக்காரு போல!

    நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று திரைத்துறையினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

    விஜய் சந்திப்பு

    விஜய் சந்திப்பு

    தியேட்டர் அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் இந்த கோரிக்கையை வைத்து வந்தன. சமீபத்தில் நடிகர் விஜய், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார். இந்நிலையில் பார்வையாளர்களின் அனுமதியை 100 சதவீதமாக அதிகரித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

    ஒரு சினிமாக்காரி

    ஒரு சினிமாக்காரி

    இதற்கு தமிழ் திரைத்துறையினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த அனுமதிக்கு எதிராக சிலர் விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர். இதுகுறித்து நடிகை கஸ்தூரி, தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதிக்கப்படுவது ஆபத்தான ஒன்று. ஒரு சினிமாக்காரி ஆக சிந்திக்கவில்லை.

    சினிமா வைரஸ்

    சினிமா வைரஸ்

    தற்போது 'கொரோனா வைரஸை சைனா வைரஸ் என்று அழைக்கிறோம். இந்த அனுமதியால் சினிமா வைரஸ் என்ற பெயரை நாம் பெற வேண்டுமா? இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரையும் திரையுலகையும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மாற்றுக் கருத்து

    மாற்றுக் கருத்து

    இதை சில நெட்டிசன்ஸ் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், நடிகை குஷ்பு, 'தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து மாற்றுக் கருத்து உடையவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நீங்கள்
    தியேட்டருக்கு சென்றால் கொரோனா பரவும் என்று கவலைப்பட்டால் தியேட்டருக்கு செல்ல வேண்டாம்.

    யாரும் கட்டாயப்படுத்தவில்லை

    யாரும் கட்டாயப்படுத்தவில்லை

    உங்கள் பயம் புரிந்து கொள்ளக்கூடியது. உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை' என்று கூறியுள்ளார். இதையடுத்து நடிகை கஸ்தூரி மீண்டும், 'நான் என்னை பற்றியல்ல மக்களை பற்றி கவலைப்படுகிறேன். அவர்கள் உடல் நலன் முக்கியம் என நினைக்கிறேன். தியேட்டருக்கு செல்பவர்களால், வீட்டில் இருப்பவர்கள் கூட பாதிக்கப்படுவார்கள். நட்சத்திர ஓட்டல்களிலேயே பாதிக்கப்படும்போது தியேட்டர்களால் எப்படி பாதுக்காக்க முடியும்? என்று கேட்டுள்ளார்.

    நடிகர் அரவிந்த் சாமி

    நடிகர் அரவிந்த் சாமி

    நடிகைகள், கஸ்தூரியும் குஷ்புவும் வெவ்வேறு கருத்தைக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்களும் இவர்கள் ட்வீட்டுக்கு தங்கள் கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நடிகர் அரவிந்த் சாமியும் நூறு சதவிகித இருக்கைக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளார். '100 சதவிகிதத்தை விட 50 சதவிகிதம் சில நேரங்களில் சிறந்ததாக இருக்கும், அவற்றில் இதுவும் ஒன்று' என்று கூறியுள்ளார்.

    English summary
    Actress kushboo and kasturi arguargument about 100% occupency of theaters on Twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X