யப்பா இத்தனை கோடியா?.. தமிழ்நாட்டை கலக்கிய குஷ்பூவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: குஷ்பூ கோலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துவந்த அவர்; இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சியை கடந்த 2000ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் இருக்கும் குஷ்பூ இப்போது பாஜகவில் ஐக்கியமாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் குஷ்பூ. முதலில் ஹிந்தி படங்களில் நடித்த அவர் பிறகு தெலுங்கில் சின்ன சின்ன படங்களில் நடித்தார். அதற்கு பிறகு தமிழில் அறிமுகமானார். அப்படி அவர் நடித்த தமிழ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதனால் தான் அறிமுகமான சில படங்களிலேயே தன்னிடம் அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக கோலிவுட்டுக்கு உணர்த்தினார். இதன் காரணமாக அவரை தொடர்ந்து பல படங்களுக்கு புக் செய்தார்கள் தயாரிப்பாளர்கள்.

முன்னணி நடிகை: அறிமுகமான கொஞ்ச காலத்திலேயே குஷ்பூ படு பிஸியான நடிகையாக மாறினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் என அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்தார். தமிழ் மட்டுமின்றி வேறு மொழிகளிலும் நடித்தார் அவர். முக்கியமாக தமிழ் அவருக்கு ஆரம்பத்தில் தெரியாவிட்டாலும் முறைப்படி தமிழை கற்றுக்கொண்டு தானே டப்பிங் பேசவும் செய்தார். அது அப்போதைக்கு பலரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
குஷ்பூ இட்லி: குஷ்பூவுக்கு தமிழ்நாட்டில் உச்சக்கட்ட கிரேஸ் இருந்தது. குறிப்பாக குஷ்பூ இட்லி என்றே ஒரு இட்லி வகை செய்யப்பட்டது. இதுபோன்று அதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகைக்கும் நடந்ததில்லை. ஒருகட்டத்தில் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதேசமயம் சின்னத்திரையிலும் தோன்றிய அவர்; நாடகங்களில் நடித்தும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக்கொண்டார்.
திருமணம்: இதற்கிடையே சுந்தர்.சி இயக்கத்தில் முறைமாமன் படத்தில் நடித்தபோது சுந்தருடன் குஷ்பூவுக்கு காதல் தோன்றியது. சில வருடங்கள் காதலித்த அவர்கள் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தக் லைஃப் படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக வேலை செய்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு மகளுக்கு நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது. எனவே குஷ்பூவின் வாரிசுகளை விரைவில் சினிமாவில் பார்க்கலாம்.
அரசியல்: நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் தனது தடத்தை பதிவு செய்திருக்கும் குஷ்பூ முதலில் திமுகவில் இருந்தார். அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால் அங்கு சில காலம் இருந்த அவர் இப்போது பாஜகவில் ஐக்கியமாகியிருக்கிறார். குஷ்பூவைப் பொறுத்தவரை தனது மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பட்டென்று பேசிவிடக்கூடியவர். ஆனால் அந்தப் பேச்சு அவருக்கு சில பிரச்னைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. பாலியல் கல்வி குறித்து போல்டாக பேசிய அவர்; தமிழ்நாட்டு பெண்களை இழிவாக பேசிவிட்டார் என்ற சர்ச்சை எழுந்ததும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டதும் நினைவுகூரத்தக்கது.
குஷ்பூவின் சொத்து மதிப்பு: இந்நிலையில் குஷ்பூ இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவிக்கும் சூழலில்; அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு 95லிருந்து 100 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம். மேலும் திருக்கழுகுன்றம் மற்றும் முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் சொகுசு பங்களாக்களை சொந்தமாக வைத்திருக்கும் அவரிடம் ஏகப்பட்ட சொகுசு கார்களும் இருக்கின்றன. நடிகை, அரசியல்வாதி என்பதை தாண்டி தயாரிப்பாளராகவும் இருக்கும் குஷ்பூ அதன் மூலம் வரும் வருமானத்தை சில தொழில்களிலும் இன்வெஸ்ட் செய்து அதிலிருந்தும் வருமானத்தை பார்த்துவருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











