தீயா டான்ஸ் ஆடணும் குஷ்பூ... கணவருக்காக ஒரு பாடலில் ஆட களமிறங்கும் குஷ்பூ

சென்னை: கணவர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகும் ' தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை குஷ்பு நடனமாடுகிறாராம்.

சமீப காலமாக சினிமாவை விட்டு விலகி பலரின் நடனத்திற்கு மதிப்பெண்களை அரசியலிலும், தொலைக்காட்சியிலும் போட்டுக் கொண்டிருந்த நம்ம குஷ்பூ, இப்போ திரும்ப ஆட போறாங்களாம். அதுவும் ஒரு பாட்டுக்கு.

உங்க டான்ஸ்க்கு யார் மார்க் போடுவாங்க மேடம்...

மானா... மயிலா...

மானா... மயிலா...

கோவில் கட்டி கும்பிடும் அளவிற்கு ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் குஷ்பூ. வயதானாலும் அழகும், திறமையும் சற்றும் குறையாமல் ஜொலிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

இளைஞன் தான் கடைசி...

இளைஞன் தான் கடைசி...

நடிகை குஷ்பு கடைசியாக 'இளைஞன்' என்ற படத்தில் நடித்தார். இப்படம் 2011-ல் ரிலீசானது. அதன் பிறகு படங்கள் எதிலும் நடிக்கவில்லை.

தீயா டான்ஸ் ஆடணும் குஷ்பூ...

தீயா டான்ஸ் ஆடணும் குஷ்பூ...

சமீபத்தில் கலகலப்பு என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது நீண்ட இடை வெளிக்கு பிறகு 'தீயா வேலை செய்யனும் குமாரு' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குஷ்பு ஆடுகிறார்.

கணவர் படம்...

கணவர் படம்...

இந்த படத்தை குஷ்புவின் கணவர் சுந்தர்.சி இயக்குகிறார். இதில் கதாநாயகனாக சித்தார்த், நாயகியாக ஹன்சிகா நடிக்கின்றனர்.

எல்லாரும் ஆடுங்கபா...

எல்லாரும் ஆடுங்கபா...

இதில் அனைத்து நடிகர், நடிகைகளையும் ஆட வைத்து ஒரு பாடல் காட்சியை படமாக்க சுந்தர்.சி முடிவு செய்துள்ளார். இந்த பாடலில் தான் குஷ்புவும் ஆடுகிறார்.

க்ளைமாக்ஸ்ல குஷ்பூ...

க்ளைமாக்ஸ்ல குஷ்பூ...

படத்தின் கிளைமாக்சில் இப்பாடல் காட்சி இடம் பெறுகிறது. ஏற்கனவே பல படங்களில் குஷ்பு ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இப்போது 'தீயா வேலை செய்யனும் குமாரு' படத்திலும் ஆடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X