நெப்போலியன் மகனுக்கு தனி திறமை இருக்கு.. நெகிழ்ந்த குஷ்பூ.. களைகட்டப்போகும் திருமணம்

சென்னை: தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் கலக்கியவர் நெப்போலியன். தனது எதார்த்தமான நடிப்பாலும், வாட்ட சாட்டமான அழகாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அவர். அவருக்கு தனுஷு, குணால் என்ற மகன்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் தனுஷுக்கு ஜப்பானில் இன்று திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் அக்‌ஷயா என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அதில் கலந்துகொள்வதற்காக கலா மாஸ்டர், மீனா, குஷ்பூ, சரத்குமார், ராதிகா, பாண்டியராஜன் என நட்சத்திர பட்டாளமே சென்றிருக்கிறது.

பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமான நெப்போலியன் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் தடம் பதித்தவர். பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் அரசியலிலும் தனது தடத்தை பதித்தவர். மத்திய இணையமைச்சராக இருந்த அவர் தற்போது சினிமா மற்றும் அரசியலிலிருந்து முழுதாக ஒதுங்கி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதற்கு காரணம் அவரது மகன் தனுஷ். நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷ் மூத்த மகன்.

napolean dhanush

தசை சிதைவு நோய்: தனுஷுக்கு சிறு வயதிலிருந்தே தசை சிதைவு நோய் வந்துவிட்டது. முதலில் இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு அது ஒத்துவரவில்லை. இதனையடுத்து அமெரிக்காவுக்கு சென்று அங்கு செட்டிலானார் நெப்போலியன். அந்நாட்டில் தனுஷுக்கான சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் தனுஷுக்காகவே ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியையும் அங்கே தொடங்கி தனது மகனை ஓனராக்கி அழகு பார்த்தார் நெப்போலியன். தன் மகனுக்காக நெப்போலியன் செய்யும் ஒவ்வொரு செயலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

தனுஷுக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் நெப்போலியன். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணை பார்த்தார். தனுஷ் - அக்‌ஷயா நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்தது. அதில் தனுஷால் கலந்துகொள்ள முடியவில்லை. அதேசமயம் வீடியோ காலில் பங்கேற்றார் தனுஷ். அவர்களது திருமணம் இன்று ஜப்பானில் நடக்கவிருக்கிறது.

களைகட்டிய ஏற்பாடுகள்: திருமணத்தை முன்னிட்டு குஷ்பூ, ராதிகா, மீனா, கலா மாஸ்டர், சரத்குமார், பாண்டியராஜன் என நட்சத்திர பட்டாளமே ஜப்பானில் குழுமியிருக்கிறது. அவர்கள் தங்குவதற்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கும் ஹில்டன் ஹோட்டலில் ரூம் புக் செய்திருக்கிறார் நெப்போலியன். மேலும் அவர்கள் திருமணத்துக்கு வருவதற்கு ஏதுவாக வாகனங்களையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

கலா மாஸ்டர் பொறுப்பு: திருமண நிகழ்வுகளை பொறுத்தவரை சங்கீத், ஹல்தி, மெஹந்தி உள்ளிட்டவைகள் நடக்கின்றன. இவற்றில் சங்கீத் நிகழ்ச்சியை கலா மாஸ்டர் பொறுப்பேற்று நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் நடனமாட இருக்கின்றனர். குஷ்பூ அதற்காக ஒத்திகை பார்த்ததை திருமண நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் பிஹைண்ட்வுட்ஸ் சேனல் வெளியிட்டிருக்கிறது. அந்த ரிகர்சலின்போது கலா மாஸ்டரிடம் தனுஷ் குறித்து குஷ்பூ நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

தனுஷுக்கு தனி திறமை: அவர் பேசுகையில், "நெப்போலியன் மகன் தனுஷுக்கு தனி திறமை இருக்கிறது. அவர் ஒரு தங்கமானவர். தனுஷ் சிறப்பான ஓவியர். அவர் வரைந்த ஓவியங்கள் நெப்போலியனின் வீட்டில் இருக்கும். அவை அனைத்தும் அவ்வளவு அழகாக இருக்கும். தனுஷின் திறமைதான் அவரது அடையாளம். அவரது அப்பாவின் விட்டுக்கொடுக்கும் தன்மை, அம்மாவின் அரவணைப்பு என அனைத்தும் கலந்தவர்தான் தனுஷ். அதேபோல் நெப்போலியனிடம் யாரும் முடியாது என்று சொன்னால் அது எப்படி முடியாது. நான் செய்துகாட்டுவேன் என்று செய்வார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X