Kushboo Health Issue: திடீரென மருத்துவமனையில் அட்மிட்டான குஷ்பூ... இது என்னப்பா கொடுமை?

ஹைதராபாத்: நடிகை குஷ்பூ சினிமா, அரசியல் என இரு பக்கங்களிலும் பிஸியாக வலம் வருகிறர்.

90களில் முன்னணி நாயகியாக கலக்கிய குஷ்பூ, தற்போது முக்கியமான கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சிக்காக ஹைதராபத் சென்றிருந்த குஷ்பூ, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை எடுத்துவரும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள அவர், ஏன் அட்மிட் ஆகியுள்ளேன் எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.


Kushboo Health Issue : 1990களில் டாப் ஹீரோயினாக கலக்கி வந்தவர் குஷ்பூ. சமீபத்தில் அவர் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். ஆனால், அவரது காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவிலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிலையில், ஹைதராபாத் சென்றிருந்த குஷ்பூ, அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள அவர், படுத்த படுக்கையாக இருந்தபடி சிகிச்சை எடுத்து வரும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார். மேலும், தனக்கு வைரல் ஃபீவர் என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது, அடினோ வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். Flu காய்ச்சலின் எந்த அறிகுறிகளையும் சாதாரணமாக நினைக்க வேண்டாம். உங்கள் உடலில் அறிகுறி தெரியும் போதே முன்னெச்சரிக்கையாக இருங்கள். வைரல் ஃபீவரால் வரும் கடுமையான உடல் வலி உங்களை பலவீனமாக்கிவிடும். எனவே உங்களது உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். திடீரென வந்த வைரல் காய்ச்சலால் குஷ்பூ மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ள சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Kushboo Health Issue: Actress Kushboo admitted to Hospital for Viral fever

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குஷ்பூ நலமுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தொடர்ந்து சிகிச்சையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம். இதனிடையே குஷ்பூ பகிர்ந்துள்ள போட்டோவில் அவரது முகம் மிகவும் வாடியிருப்பதை கண்ட ரசிகர்கள், அவர் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

அதேபோல், சினிமா நட்சத்திரங்கள் ராஷி கண்ணா, ஸ்ரேயா, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் குஷ்பூவுக்கு ஆறுதல் தெரிவித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்னர் காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டார் குஷ்பூ. அந்த சம்பவமும் அவர் ஹைதராபாத் சென்றிருந்த போதுதான் நடந்தது. தற்போதும் அங்கு சென்றிருக்கும் போதுதான் குஷ்பூ காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X