Kushboo Health Update: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய குஷ்பூ... ஆனாலும் இப்படியொரு நிலையா?

ஹைதராபாத்: நடிகை குஷ்பூ இரு தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அடினோ வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக குஷ்பூ தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த குஷ்பூ, தற்போது வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அப்டேட் கொடுத்துள்ள குஷ்பூ, தற்போது வீட்டில் இருந்தாலும் சில கட்டுப்பாடுகள் இருப்பதாக சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

 Kushboo Health update: Kushboo tweeted that she had returned home from the hospital

Kushboo Health Update
நடிகை குஷ்பூ சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத் சென்றிருந்தார். அப்போது திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். படுத்த படுக்கையாக சிகிச்சை எடுத்து வந்த குஷ்பூ, தனக்கு வைரல் ஃபீவர் என இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் குஷ்பூ விரைவில் நலம்பெற வேண்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ஒரு வாரத்துக்கு ஓய்வெடுக்கவும் பயணங்களை தவிர்க்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நான் விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்த அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நான் ஏற்கனவே சொன்னது போல புளூ காய்ச்சல் மிக மோசமானது. அது பாதிக்கப்பட்டதால் காய்ச்சல், உடல் வலி, பலவீனம் ஆகியவற்றால் உடல் சோர்வுற்று மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். உங்களுக்கு உடல் சோர்வாக இருப்பதாக தோன்றினால், தயவுசெய்து இந்த அறிகுறியை புறக்கணிக்காமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 Kushboo Health update: Kushboo tweeted that she had returned home from the hospital

அடினோ வைரஸ்ஸால் Flu காய்ச்சல் ஏற்பட்டு குஷ்பூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது திரையுலகில் பரபரப்பாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அவர் வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், சில தினங்களுக்கு அவரை பொதுநிகழ்ச்சிகளில் பார்க்க முடியாது என சொல்லப்படுகிறது.

 Kushboo Health update: Kushboo tweeted that she had returned home from the hospital

சினிமா, அரசியல் என இருபக்கமும் பரபரப்பாக வலம் வரும் குஷ்பூ, கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மருத்துவமனை சென்று வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காலில் காயம் ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். அதிலிருந்து மீண்டு வரவும், தற்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுள்ளார்.

ஜிம், ஃபிட்னஸ், டயட் என ஹெல்த்தில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் குஷ்பூவுக்கே இந்த நிலையா என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில் தான் தனது உடல் எடையை குறைத்து இளம் நாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வலம் வந்தார். இப்போது வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விரைவில் குஷ்பூ பழைய நிலைக்கே வருவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X