வாரே வா.. குஷ்பு இட்லியை இங்க போய் சாப்பிடணும்.. செம மேட்ச்சா கீதுபா!
சென்னை: குஷ்பு இட்லி.. இதை உச்சரிக்காத தமிழ்நாட்டு மக்களே இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு இட்லிக்குப் பெயர் வைத்து சிலாகித்து, சட்னியை கூட தொட்டுக் கொள்ள மறந்த காலம் அது.
இன்று வரை என்னென்னவோ பதார்த்தங்கள் வந்து விட்டாலும் கூட.. குஷ்பு இட்லிக்கு இப்போதும் கூட கிராக்கி உள்ளது என்பதுதான் எதார்த்தம்.
இப்ப சொல்லப் போற மேட்டர் புதுசுங்க.. டிவிட்டரில் கண்ணில் பட்ட படம் ஒன்று வாய் விட்டு சிரிக்க வைத்தது. காரணம் ஒரு கடையின் படம் அது.. படத்தில் இருக்கும் கடையின் போர்டைப் பார்த்தால் வாய் தானாகவே புன்னகைத்தது.
எந்த ஊர்னு தெரியலப்பா
என்ன ஊர் என்று தெரியலை.. ஏதோ ஒரு ஊரின் இரவு நேர காட்சி அது. கடையின் பெயர் குஷ்பு மெஸ். கடைக்கு மேலே டாப்பான இடத்தில் வைத்துள்ளனர். சாப்பாடு, டிபன் ரெடி என்று கூடுதல் தகவல். வீட்டுச் சமையலாம். மெஸ் என்றாலே வீட்டுச் சமையல் மாதிரிதானே இருக்கும்.

சூப்பர் பெயர்
இதை ஒருவர் ஷேர் செய்துள்ளார். வழக்கமாக குஷ்பு இட்லி என்று கேட்டுச் சாப்பிடும் நம் மக்களுக்கு குஷ்பு பெயரில் கடை இருந்தால் எப்படி இருக்கும். கூடுதலாக 2 இட்லி வாயில் போகும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

குஷ்பு இட்லி
இந்த மெஸ் போர்டை எடுத்து ஷேர் செய்துள்ளவர்கள் உங்களுக்கு கோவில் கட்டிய தமிழகம், பெயரை மட்டும் விட்டு வைக்கவா செய்யும் என்று குஷ்புவையும் டேக் செய்துள்ளனர். குஷ்புவும் இதைப் பார்த்துள்ளார்.
குஷ்பு மெஸ்
தனக்காக கோவில் கட்டி, இட்லி சுட்டு சிறப்பித்த தமிழக மக்கள் இப்போது மெஸ்ஸையும் விட்டு விடாமல் அன்பைப் பொழிந்துள்ளதைப் பார்த்து கபகபவென சிரித்து, தம்ஸ் அப் கொடுத்து, கை கூப்பி கும்பிட்டு மகிழ்ச்சியுடன் கமெண்ட் போட்டுள்ளார்.
என்ன ஒரு குறைன்னா.. பக்கத்துலேயே சுந்தர்.சி சூப் ஸ்டால் ஏதாவது போட்டிருந்தா வெகு சிறப்பாக இருந்திருக்கும்..!


Click it and Unblock the Notifications











