கணவர் கன்னத்தில் நச்சென ஒரு முத்தம்.. சுந்தர். சி சூப்பர்.. குஷ்பு வெளியிட்ட ரொமான்டிக் பிக்ஸ்!
சென்னை: இயக்குநர் சுந்தர். சியை திருமணம் செய்துக் கொண்டு இரு மகள்களுக்கு அம்மாவாக மாறி பல ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் குஷ்பு மற்றும் சுந்தர். சி இடையே உள்ள ரொமான்ஸ் அப்படியே இருப்பதற்கு இந்த புகைப்படங்களே ஆதாரமாக உள்ளன.
சினிமா, சீரியல், அரசியல் என குஷ்பு பிசியாக இருந்தாலும், குடும்பத்திற்கும் தனது நேரத்தை சரியாக செலவிட்டு வருகிறார்.'

இயக்குநராகவும் ஹீரோவாகவும் வலம் வரும் சுந்தர். சி தனது மனைவியுடன் மகள்களின் தொல்லை எல்லாம் இல்லாமல் தனியாக ரொமான்ஸ் செய்யும் போட்டோக்கள் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.
23 ஆண்டுகால திருமண வாழ்க்கை: கடந்த 2000ம் ஆண்டு இயக்குநர் சுந்தர். சிக்கும் நடிகை குஷ்புவுக்கும் திருமணம் ஆனது. 23 ஆண்டுகள் சந்தோஷமாக திருமண வாழ்க்கையை நடத்தி வரும் நடிகை குஷ்பு தற்போது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இரண்டு பேரும் செம அழகு: புது வீட்டுக்கு கிரகப் பிரவேஷம் செய்தது போல நெற்றியில் கருப்பு பொட்டெல்லாம் வைத்துக் கொண்டு லைட் பிங்க் உடையில் இருவரும் மேட்சிங் மேட்ச்சாக போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை நடிகை குஷ்பு சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். "Love makes the world go round" என்கிற கேப்ஷனையும் கொடுத்துள்ளார். 55 வயது சுந்தர். சி மற்றும் 52 வயது குஷ்பு இருவருமே இந்த வயதிலும் செம அழகு என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

கன்னத்தில் நச்சென முத்தம்: கணவர் சுந்தர். சியை கட்டியணைத்து அவரது கன்னத்தில் நச்சென முத்தம் கொடுத்த போட்டோ ஒன்றையும் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார். 23 ஆண்டுகால திருமண வாழ்க்கையிலும் கொஞ்சம் கூட காதல் குறையாமல் இப்படி நீங்க ரெண்டு பேரும் இருப்பதை பார்த்தாலே பொறாமையாக இருக்கு என்றும் சுத்திப் போட்டுக்கோங்க என ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். திடீரென இப்படி போட்டோக்களை வெளியிட்டு இருக்கீங்களே என்ன விசேஷம் என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
அரண்மனை 4க்கு வெயிட்டிங்: சமீபத்தில், தலைநகரம் 2 படத்தில் சுந்தர். சி நடித்திருந்தார். கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் படத்தை இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அடுத்ததாக அரண்மனை 4 படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும், ஒன் டு ஒன், வல்லான் படங்களிலும் நடித்து வருகிறார் சுந்தர். சி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











