முதல்ல ரோடு நல்லா போடுங்க... அப்புறம் பைன் போடுங்க - சொல்லாமல் சொன்ன குஷ்பூ

Recommended Video

என்ன இந்த பொண்ணு அசால்ட்டா கெளம்பிருச்சு | Lady Viral Video

சென்னை: நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆட்டோ ஒன்று நடுரோட்டில் சரிந்து விழும் வீடியோ ஒன்றினை போஸ்ட் செய்துள்ளார். அந்த ஆட்டோவில் பயணித்த பயணிகளுக்கு பெரும் விபத்து ஏற்படவில்லை என்றாலும் சரியான சாலை வசதி இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணம்.

சினிமா துறையை சேர்ந்தவராக இருந்தாலும் அரசியலிலும் தனது பங்களிப்பை மிகுதியாக அளித்து வருகிறார் நடிகை குஷ்பூ. சமூக அக்கறையோடு பலதரப்பு பிரச்சனைகளில் தன்னை முன்னிலை படுத்தியவர். அவர் குடும்பம், தொழில், அரசியல் என அனைத்திலும் அவர் தனது முழு ஒத்துழைப்பை தந்து வருகிறார்.

நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் அடிக்கடி செல்ஃபி எடுத்து போஸ்ட் செய்வது வாடிக்கையான ஒன்றே. சமூக வலைதளங்களிலும் சமுதாய அக்கறையோடு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆட்டோ ஒன்று நடுரோட்டில் கவிழ்ந்து விழும் வீடியோ ஒன்றினை போஸ்ட் செய்துள்ளார். அந்த ஆட்டோவில் பயணித்த பயணிகளுக்கு பெரும் விபத்து ஏற்படவில்லை என்றாலும் சரியான சாலை வசதி இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணம். குஷ்பூ இதை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளது அவரின் சமூக அக்கறையை காட்டுகிறது.

ரோடு சரியில்லை

ரோடு சரியில்லை

இந்த விபத்து எந்த இடத்தில் நடந்தது என்பது சரியாக தெரியவில்லை என்றாலும் இந்தியாவின் பெரும்பாலான சாலைகள் இப்படி தான் இருக்கின்றன. இதனால் பல விபத்துகள் தினம் தினம் நடக்கின்றன. இந்திய சாலைகள் இப்படி இருந்தால் அது பெரிய ஆபத்துகளை உருவாக்கும். இதை அரசாங்கம் உடனடியாக தலையிட்டு ஒரு தீர்வை கொண்டு வரவேண்டும் என்று சமூக அக்கறையுடன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சமூக அக்கறை

சமூக அக்கறை

குஷ்பூ மட்டுமின்றி திரையுலகில் இருக்கும் பலரும் சமூக அக்கறையோடு பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். இதை போஸ்ட் மட்டுமே செய்யாமல் சமூக அக்கறையோடு பதவி அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்பிரச்சனைகளை அடுத்த லெவெலுக்கு எடுத்து சென்று முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

சினிமா துறையில் பிரபலமாய் இருந்த பலரும் அரசியலில் இறங்கி பல சட்டங்கள் கொண்டு வந்தவர்கள் தான். ஆகையால் அவர்கள் நினைத்தால் எந்த ஒரு சமூக பிரச்சனை ஆனாலும் ஒரு முடிவு கொண்டு வர முடியும். ஆனால் எத்தனை பேர் சமூக பிரச்சனைகளுக்கு முன்வந்து களத்தில் இறங்கி வேலை செய்வர். இவர்கள் அனைவரும் கை கொடுத்தால் நம் நாட்டை நிச்சயம் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லலாம். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X