ரஜினியை "வாடா" என்று அழைத்த நடிகை.. ஷாக்கான படக்குழு.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் 700 கோடி வசூலித்து சாதனை படைத்த நிலையில், ரஜினி தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மாஸ் நடிகரான சூப்பர் ஸ்டாரை நடிகை ஒருவர் வாடா என அழைத்த சம்பவம் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
ஜெயிலர் திரைப்படத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் பட்டையை கிளப்பி இருப்பார் ரஜினிகாந்த். இப்படத்தின் மகத்தான வெற்றிக்கு அனிருத்தின் அட்டகாசமான இசை மிகப்பெரிய காணமாக சொல்லலாம். இந்த படத்தைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ரஜினி. ஆனால் அப்படம் சரியாக போகவில்லை. இருந்தாலும் ரஜினி நடித்த மொய்தீன் பாய் கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

வேட்டையன்: ரஜினி தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜெய் பீம் போல மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த ஞானவேலின் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போகிறார் என்றதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படம் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தலைவர் 171: வேட்டையன் படத்தை தொடர்ந்து, ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ரஜினியின் 171வது படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ள நிலையில், படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், ரன்வீர் சிங் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாடா என அழைத்த நடிகை: ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்தை புதுமுக நடிகை ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் வாடா என்று அழைத்த சம்பவம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நடிகை குஷ்பூ ரஜினியுடன் தர்மத்தின் தலைவன் படத்தில் முதன் முதலில் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார். அந்த படத்தில் அவர் பிரபுவின் காதலியாக நடித்து இருப்பார். அவர் மும்பையில் இருந்து வந்ததால், அவருக்கு தமிழ் தெரியவில்லை. ஹிந்தியும் ஆங்கிலமும் மட்டுமே அவருக்கு தெரிந்தது. அப்போது அவர் ஒருநாள் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்கு வந்த போது, வாங்க என்று சொல்வதற்கு பதிலாக வாடா என்று சொல்லி இருக்கிறார். இதைப்பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து போனார்கள். ஆனால் ரஜினி இதை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல், சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாராம்.
சொல்லிக்கொடுத்த பிரபு: அப்போது உடனிருந்த பிரபு குஷ்புவிடம் சென்று ரஜினி சாரை ஏன் இப்படி சொன்னாய்? என்று கேட்டபின் தான் குஷ்பூவுக்கு அந்த விஷயமே புரிந்ததாம். பிறகு தமிழ் வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக பிரபுதான் குஷ்புவிற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதற்குப் பிறகுதான் ரஜினியுடன் குஷ்பூ சேர்ந்து மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற திரைப்படங்களில் நடித்தார்கள்.


Click it and Unblock the Notifications











