ரஜினி குறித்த அடுத்தடுத்த பாராட்டு பத்திரம்.. குஷ்பூ என்ன சொல்லியிருக்காங்கன்னு பாக்கலாமா!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாகி தற்போது சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்துப் படங்களும் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வருகின்றன.

அனைத்து படங்களும் தயாரிப்பாளர்களுக்கு 200 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலை ஈட்டித் தருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில்தான் முதல்முதலில் அறிமுகமானார். அழுக்கு கோட்டுடன் அவர் கேட்டை திறந்துக் கொண்டு வரும் முதல் காட்சியை பார்த்தவர்களுக்கு அவர்தான் கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் என்பது அப்போது தெரியாது. ஸ்ரீவித்யாவின் கணவராக சிறிது நேரத்தில் வந்து அவரை விதவையாக்கிவிட்டு போவார்.

பரட்டை கேரக்டரில் ரஜினி

பரட்டை கேரக்டரில் ரஜினி

தொடர்ந்து இவரை 16 வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக பார்க்க முடிந்தது. வில்லன் கேரக்டரிலும் ஸ்டைல் காட்ட முடியும் என்பதை நிரூபித்தார். இது எப்படி இருக்கு என்று கவுண்டமணியை பார்த்து ரஜினி கேட்டபோது, ரசிகர்களும் அதை ரிப்பீட் செய்தனர். தொடர்ந்து இவரை ஹீரோவாகவும் ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து சூப்பர்ஸ்டார்

தொடர்ந்து சூப்பர்ஸ்டார்

சிறப்பான பல படங்களை இவர் ரசிகர்களுக்கு தந்துள்ளார். வித்தியாமான கதைக்களங்களில் வெளியான இந்தப் படங்கள் ரசிகர்களை கட்டிப் போட்டன. தொடர்ந்து 70 வயதை கடந்தும் ரஜினி நடித்து வருவது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி கோலிவுட்டிற்கே பெருமை சேர்ப்பதாகும்.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

சமீபத்தில் பாடகி பிரியங்கா ஜப்பானில் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியபோது, முத்து படத்திலிருந்துதான் அவர்கள் பாடச் சொல்லிக் கேட்டார்களாம். அந்த அளவிற்கு ரசிகர்களை அவரது படங்கள் இந்தியா தாண்டியும் சிறப்பான நடிகராக காட்டி வருகிறது. தொடர்ந்து தன்னுடைய ஹிட் படங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார் ரஜினி.

திரையுலகினர் பாராட்டு

திரையுலகினர் பாராட்டு

இவரை ரசிகர்கள் மட்டுமின்றி சக நடிகர்களும், திரையுலக பிரபலங்களும் இல்லாமல் மற்ற மொழிகளை சேர்ந்த கலைஞர்களும் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் தன்னுடைய படத்தின் பிரமோஷனின்போது பேசிய மலையாள நடிகர் பிரித்வி, ரஜினியை வைத்து தான் முழுநீள காமெடி படத்தை எடுக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

ரஜினி குறித்து குஷ்பூ

ரஜினி குறித்து குஷ்பூ

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நடிகை குஷ்பூ, ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, இயக்குநர்கள் எவ்வளவு டேக்குகள் எடுத்தாலும் சோர்ந்து போகாமல், இந்த மாதிரி முயற்சிக்கவா என்று கேட்டு தன்னுடைய எனர்ஜியை ரஜினி காட்டுவார் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்திலும் கவனம்

அனைத்திலும் கவனம்

தலைவரை பார்த்தாலே ஒரு மரியாதை வரும் என்றும் அதுதான் தலைவர் என்றும் அவர் கூறியுள்ளார். தினந்தோறும் சூட்டிங்கின்போது அவரிடம் கற்றுக்கொள்ள அதிகமான விஷயங்கள் இருக்கும் என்றும் பாராட்டியுள்ளார். கேமிரா உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் அவர் கவனம் செலுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Kushboo Speech in Aha OTT app Grand launch in Tamil | Allu Aravind
ரஜினியின் டெடிகேஷன்

ரஜினியின் டெடிகேஷன்

அவர் சூப்பர்ஸ்டாராக இருப்பதற்கு சினிமாவில் அவர் காட்டும் ஆர்வம் மற்றும் டெடிகேஷனே காரணம் என்றும் குஷ்பூ தெரிவித்துள்ளார். ரஜினி -குஷ்பூ ஜோடி 90களில் சிறப்பான ஜோடியாக அறியப்பட்டது. சமீபத்தில் 30 ஆண்டுகளை கடந்த அண்ணாமலை படத்திலும் குஷ்புவே ரஜினியின் ஜோடியாக நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X