ரஜினிகாந்த் சரியான நேரத்தில் அதை செய்திருந்தால்.. நிலைமை வேறு.. குஷ்பூ ஓபன் டாக்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வருடம் கூலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் அந்தத் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கிறது. இதில் ரஜினிகாந்த்துடன் நாகார்ஜுனா, சத்யராஜ், ஆமீர் கான், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக இந்தப் படம் ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் கண்டிப்பாக தங்கள் சூப்பர் ஸ்டாரின் கரியரில் மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் என்ற நம்பிக்கையை வைத்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் எதிர்பார்த்தபடி படம் அமையவில்லை. முக்கியமாக இது ரஜினி படம் மாதிரியும் இல்லை; ஞானவேல் படம் மாதிரியும் இல்லை இரண்டு கலந்த கலவையாக இருக்கிறது என்று விமர்சனத்தை முன்வைத்தார்கள்.

கூலி ரஜினிகாந்த்: வேட்டையனுக்கு முன்னதாக ரிலீஸான ஜெயிலர் மெகா ஹிட்டானது. ஆனால் வேட்டையனில் அந்த ஃபார்ம் கொஞ்சம் குறைந்துவிட்டதால் அடுத்த படத்தை அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள். காரணம் அந்தப் படத்தின் இயக்குநர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி படம் வேட்டையனில் விட்டதை கண்டிப்பாக மீட்டு கொடுத்துவிடும் என்று இப்போதே கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

Kushboo Open Talks about Rajinikanth s Politics

ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்:இந்தப் படத்தில் ரஜினியுடன் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அதுமட்டுமின்றி இதற்கு முன்னர் லோகேஷ் இயக்கியிருந்த லியோ திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோலுக்கும் உள்ளானது. எனவே கூலி மூலம் அதற்கு பதிலடி தர லோகேஷும் மும்முரமாக இருக்கிறார். படமானது இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகிறது. கண்டிப்பாக வசூல் சாதனை படைக்கும் என்ற ஆவலும் ரஜினி ரசிகர்களிடம் உச்சக்கட்டமாக இருக்கிறது.

ஜெயிலர் 2: கூலி படத்தின் ஷூட்டிங்கை முடித்திருக்கும் ரஜினிகாந்த்; இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே இந்தக் கூட்டணியில் உருவாகியிருந்த ஜெயிலர் படத்தின் முதல் பாகம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் கண்டிப்பாக இப்படமும் அதேபோல்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள் ரசிகர்கள். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் அட்டப்பாடியில் தொடங்கி நடந்துவருகிறது. அதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

ரஜினியின் அரசியல்: இதற்கிடையே ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று 90களிலிருந்தே அவரது ரசிகர்கள் ஆவலோடு கேட்டுவந்தார்கள். அவரும் அதற்கு தெளிவான பதில் எதுவும் கொடுக்காமல் இருந்துவந்தார். ஒருவழியாக கடந்த 2017ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாகவும்; தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று கூறினார். ஆனால் திடீரென தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் களத்தில் குதிக்க மறுத்துவிட்டார்.

குஷ்பூ பேட்டி: இந்நிலையில் நடிகை குஷ்பூ ரஜினிகாந்த் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "நான் நடிகர் ரஜினியை சந்தித்து அரசியல் குறித்து பேசியிருக்கிறேன். சரியான நேரத்தில் மட்டும் அவர் அரசியலுக்கு வந்திருந்தால் தமிழ்நாட்டுடைய அரசியல் மேப் இப்போது வேறு மாதிரி மாறியிருக்கும்" என்றார். குஷ்பூவின் இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கலாமோ; மிஸ் ஆகிடுச்சே என்று சோகத்துடன் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X