'ஓவர் நெகட்டிவிட்டி.. நான் நானாக இல்லை'.. அதிரடியாக டிவிட்டரில் இருந்து வெளியேறிய குஷ்பு!

நடிகை குஷ்பு டிவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.

Recommended Video

Kushboo quits twitter because of negativity

சென்னை: எதிர்மறையான விஷயங்கள் அதிகரித்துவிட்டதாகக் கூறி, டிவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார் நடிகை குஷ்பு.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகையாக இருக்கும் குஷ்பு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத நபராக உருவாகி கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருக்கும் அவர், சினிமா,சீரியல், அரசியல் என அனைத்திலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

சமூக வலைதளங்களில் குஷ்பு தீவிரமாக இயங்கக் கூடியவர். டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் லட்சக்கணக்கானவர்கள் குஷ்புவை தொடர்ந்து வருகின்றனர். சமூகம் சார்ந்த கருத்தாக இருந்தாலும், அரசியல் சார்ந்த கருத்தாக இருந்தாலும், அதை தைரியமாக பதிவிடக்கூடியவர் குஷ்பு.

வெளியேறிய குஷ்பு

வெளியேறிய குஷ்பு

இந்நிலையில் குஷ்பு டிவிட்டரில் இருந்து திடீரென வெளியேறியுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென டிவிட்டரில் இருந்து குஷ்பு வெளியேறியது ஏன் என ரசிகர்கள் குழம்பினர்.

குஷ்பு விளக்கம்

குஷ்பு விளக்கம்

இதுகுறித்து குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "டிவிட்டரில் இருக்கும் போது நான் நானாகவே இல்லை. டிவிட்டரில் எதிர்மறையான விஷயங்கள் அதிகரித்துவிட்டன. அது என்னையும் ஆட்கொள்கிறது. கிண்டல் செய்பவர்களுக்கு பயந்து நான் டிவிட்டரில் இருந்து வெளியேறவில்லை. நான் நானாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் டிவிட்டரில் இருந்து வெளியேறினேன்", என விளக்கம் அளித்துள்ளார்.

எனக்கு ஜனநாயகம் கிடையாதா?

எனக்கு ஜனநாயகம் கிடையாதா?

மேலும், "டிவிட்டரில் சில ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும். இங்கு ஜனநாயகம் இருப்பதாக நீங்கள் கூறலாம். உங்களிடன் இருக்கும் ஜனநாயகத்தை வைத்து நீங்கள் என்னை அசிங்கப்படுத்தினால், நானும் அதே ஜனநாயகத்தை வைத்து அதேபோல் அசிங்கப்படுத்துவேன். ஒரு நடிகையாக, அரசியல்வாதியாக இருப்பதாலேயே, இந்த நாட்டின் ஜனநாயகத்தை நான் அனுபவிக்கக்கூடாதா? என்ன", என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே இப்படி நடந்துள்ளது

ஏற்கனவே இப்படி நடந்துள்ளது

நடிகை குஷ்பு கடந்த 2017ம் ஆண்டும் இதே போல் டிவிட்டரில் இருந்து வெளியேறினார். சில மாதங்களுக்கு பிறகு அவர் மீண்டும் டிவிட்டரில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்போதும் சில மாதங்களுக்கு பிறகு குஷ்பு மீண்டும் டிவிட்டரில் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X