வீட்டில் அப்பாவும் அக்காவும் பரம சாது..குஷ்பூவின் இளைய மகள் பளீச்!
சென்னை : குஷ்பூ மற்றும் சுந்தர் சி இருவரும் சிறப்பான மனமொத்த தம்பதிகளாக இருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் அவந்திகா மற்றும் அனந்திதா. இருவருமே தற்போது திரையில் தங்களது பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் தன்னுடைய குடும்பம் மற்றும் கேரியர் குறித்து அனந்திதா சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

சிறப்பான நடிகை குஷ்பூ
சிறப்பான நடிகையாக முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சத்யராஜ், விஜய்காந்த், சரத்குமார் என பலருடன் இணைந்து நடித்துள்ளார் குஷ்பூ. இவருக்கு கோயில் கட்டும் அளவிற்கு இவரை இவரது நடிப்பு மற்றும் அழகை ரசிகர்கள் அதிகமாக கொண்டாடினர். குஷ்பூ இட்லியும் மிகவும் பேமஸ்.

சுந்தர் சியை மணந்த குஷ்பூ
இந்நிலையில் தான் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே இயக்குநர் சுந்தர் சியை காதலித்து மணந்துக் கொண்டார் குஷ்பூ. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் அவந்திகா மற்றம் அனந்திதா. இவர்கள் இருவரும் தற்போது நன்றாக வளர்ந்துள்ள நிலையில் இருவரும் திரைத்துறையில் விரைவில் கால் பதிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிப்பு பயிற்சியில் அவந்திகா
தற்போது லண்டனில் தன்னுடைய நடிப்புக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் மூத்தவர் அவந்திகா. விரைவில் இவர் நடிக்கவுள்ளதாகவும் ஆனால் தாங்கள் இருவரும் அவருக்கு எந்தவிதமான சிபாரிசும் செய்ய மாட்டோம் என்றும் சமீபத்தில் குஷ்பூ ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தயாரிப்பாளராகும் அனந்திதா
இந்நிலையில் தற்போது தன்னுடைய குடும்பம் மற்றும் தான் தேர்ந்தெடுக்கவுள்ள கேரியர் குறித்து ஒரு பேட்டியில் அவந்திதா பேசியுள்ளார். 19 வயதான அவர் அவருடைய அப்பா வழியில் தயாரிப்பாளராக களமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல தன்னுடைய அக்காவும் நடிப்பில் இறங்கவுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

திறமைக்கே முன்னுரிமை
தான் தயாரிப்பாளராக மாறினாலும் திறமை இருப்பவர்களுக்கே தான் முன்னுரிமை கொடுக்க உள்ளதாகவும் இந்த விஷயத்தில் தன்னுடைய தயாரிப்பில் தன்னுடைய அக்கா என்பதால் அவருக்கு சான்ஸ் கொடுக்க மாட்டேன் என்றும் உண்மையில் அவளுக்கு திறமை இருந்தால் மட்டுமே சான்ஸ் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

அப்பாவும் அக்காவும் பரம சாது
இதனிடையே அவந்திகாவும் தன்னுடைய அப்பாவும் ஒரே மாதிரியான கேரக்டர்கள் என்றும் இருவரும் வீட்டில் இருந்தாலும் அதிகமாக பேச மாட்டார்கள் என்றும் அனந்திதா குறிப்பிட்டுள்ளார். இருவரும் பரம சாதுவாக தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொங்கும் பாசம்
ஆனால் அவர் சென்னையிலிருந்து லண்டனுக்கு சென்றுவிட்டால் பாசம் பொங்கும் என்றும் நாள் முழுவதும் கூட இருவரும் சாட்டிங்கில் ஈடுபடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீட்டில் அவருடைய அடிக்கடி சண்டை நடக்கும் என்றும் ஆனால் அவர் லண்டனுக்கு சென்றுவிட்டால் தன்னுடைய அம்மாவே ஆச்சர்யப்படும் வகையில் தங்களின் சாட்டிங் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











