குஷ்பூ - சுந்தர் சி மகள் அவந்திகாவுக்கு கோவாவில் நாளை திருமணம்?

சென்னை: தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாகவும், தற்போது பாஜகவின் முக்கிய அரசியல் தலைவராகவும் வலம் வருபவர் நடிகை குஷ்பூ. இவரும், தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். திரைத்துறையில் மிகச்சிறந்த நட்சத்திர தம்பதிகளாகத் திகழும் இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சினிமாவில் சாதித்த இந்த தம்பதியினர், அரசியலிலும் தடம் பதித்துள்ளனர். நடிகை குஷ்பூ பாஜகவில் கலக்கி வர, இயக்குனர் சுந்தர் சி அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை மத்தி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராகக் களம் இறங்கிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில், இவர்களது மூத்த மகள் அவந்திகாவிற்கும், அவரது ஷ்ரவன் சீனிவாசன் என்பவருக்கும் நாளை கோவாவில் மிக பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற உள்ளது.

Kushboo Sundar C daughter marriage
Photo Credit:

விஐபிக்களுக்கு நேரில் அழைப்பு: தனது மகளின் திருமணத்திற்காகத் திரையுலகம் மற்றும் அரசியல் உலகைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்துப் பத்திரிகை வைத்தார் குஷ்பூ. கடந்த மாதம் டெல்லி சென்ற குஷ்பூ மற்றும் சுந்தர் சி, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துத் தங்களது மகள் திருமணப் பத்திரிகையைக் கொடுத்து ஆசி பெற்றனர். அதேபோல், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களையும் நேரில் சந்தித்துத் திருமண அழைப்பிதழைக் கொடுத்தனர்.

கோவா கடற்கரையில் திருமணம்: பிரதமர், முதலமைச்சர் எனப் பெரிய பெரிய விஐபிக்களுக்குப் பத்திரிகை கொடுத்திருந்தாலும், நாளை கோவாவில் நடைபெறவிருக்கும் இந்தத் திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும் என குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் கோவாவில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டில் இந்தத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரை உலக வட்டாரத்தில் பரவும் தகவல்களின்படி, வெறும் 25 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் நேரடியாகக் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்துக் குடும்பத்தினர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த விபரமும் சொல்லப்படவில்லை என்றாலும், திருமணத்திற்காக ஒட்டுமொத்தக் குடும்பமும் ஏற்கனவே கோவாவிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X