குஷ்பூ நோ சொல்லிருந்தா கன்ஃபார்மா அவங்க தான்... சுந்தர் சி மைண்ட் வாய்ஸ்ல இருந்தது யாரு தெரியுமா?
சென்னை: முறை மாமன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர் சி.
தயாரிப்பாளர்களின் இயக்குநர் என அழைக்கப்படும் சுந்தர் சி, 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இதனிடையே, 2000ம் ஆண்டில் சுந்த சி - நடிகை குஷ்பூ இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், குஷ்பூ நோ சொல்லியிருந்தால் இன்னொரு நடிகைக்கு தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன் என சுந்தர் சி மனம் திறந்துள்ளார்.

குஷ்பூ இல்லைன்னா அவங்க தான்:1995ம் ஆண்டு இயக்குநராக அறிமுகம் ஆன சுந்தர் சி, இதுவரை 35க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது முதல் படமான முறை மாமன், காமெடி ஜானரில் உருவாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ஜெயராம் - குஷ்பூ இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களை சுந்தர் சி இயக்கியுள்ளார். முறை மாமன் திரைப்படம் உருவாகும் போதே சுந்தர் சி-க்கும் குஷ்பூவுக்கும் இடையே காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அதனை மறுத்துவந்த இந்த ஜோடி, 2000ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர்.
குஷ்பூ முன்னணி நடிகையாக வலம் வந்த நேரத்தில், சுந்தர் சி-ஐ திருமணம் செய்துகொண்டது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இருவருமே தற்போது தங்களது இரண்டு மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே குஷ்பூவை திருமணம் செய்துகொண்டது குறித்து இயக்குநர் சுந்தர் சி மனம் திறந்துள்ளார்.
தற்போது அரண்மனை 4 படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சுந்தர் சி. இந்த சூழலில் தனது வாழ்க்கையில் குஷ்பூ மட்டும் வரவில்லை என்றால் எனக்கு இன்னொரு சாய்ஸ் இருந்தது என்றுள்ளார். அதாவது குஷ்பூவிடம் காதலை சொன்னபோது அவர் நோ சொல்லியிருந்தால், தான் செளந்தர்யாவுக்கு ப்ரோபோஸ் செய்திருப்பேன் எனக் கூறியுள்ளார் சுந்தர் சி.
தமிழில் பொன்னுமணி திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் செளந்தர்யா. தமிழில் முதல் படத்திலேயே கார்த்திக் ஜோடியாக நடித்த செளந்தர்யா, அடுத்து சேனாதிபதி படத்தில் சத்யராஜ் ஜோடியாகவும், அருணாச்சலம் படத்தில் ரஜினியுடனும் நடித்திருந்தார். ரஜினி - செளந்தர்யா நடித்த அருணாச்சலம் படத்தை சுந்தர் சி தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எனக்கு மிகவும் பிடித்த இரண்டு நாயகிகளில் சௌந்தர்யாவும் ஒருவர். குஷ்பூ என்னுடைய வாழ்வில் வராத பட்சத்தில் நான் செளந்தர்யாவுக்கு ப்ரொபோஸ் செய்திருப்பேன் எனக் கூறியுள்ளார் சுந்தர் சி. மேலும், அவர் ரொம்ப நல்ல பெண் என்றும், அப்படி ஒருவரை பார்ப்பது ரொம்பவே அரிது எனவும் சுந்தர். சி கூறியுள்ளார்.
ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா, விஜயகாந்துடன் தவசி, சொக்கத்தங்கம், கமலுடன் காதலா காதலா போன்ற படங்களில் நடித்துள்ள செளந்தர்யா, 2004ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் காலாமானார் என்பது குறிப்பிடத்தக்கது. செளந்தர்யா உயிரிழந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி அவரை காதலிக்க காத்திருந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











