Diwali Special: குஷ்பு வீடே சும்மா தங்க கோட்டை போல ஜொலிக்குதே.. தீபாவளி கொண்டாட்டம் ஸ்டார்ட்!

சென்னை: தீபாவளி 2023 களைகட்ட தொடங்கியுள்ளது. இளம் நடிகைகள் முதல் சீனியர் நடிகைகள் என பல பிரபலங்களும் தீபாவளி மோடுக்கு மாறி உள்ளனர். அதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகை குஷ்புவின் அவ்னி இல்லம் மின் விளக்குகள் தங்க கோட்டை போல ஜொலி ஜொக்கும் புகைப்படங்கள் அதிக லைக்குகளை அள்ளி வருகின்றன.

Kushboo Sundar celebrates Diwali and shares super cool photos

செம க்யூட்டாக சேலையில் நடிகை குஷ்பு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

களைகட்டும் தீபாவளி: நாளை நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளியை சொந்த ஊரில் சொந்த பந்தங்களுடன் கொண்டாட பலரும் ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். பட்டாசு வெடிக்க நாளை 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதலே பல இடங்களில் வேட்டு சத்தம் விண்ணை பிளந்து வருகிறது. இளம் நடிகைகள் முதல் பல சினிமா பிரபலங்களும் புத்தாடை அணிந்துக் கொண்டு போட்டோக்களை வெளியிட்டு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Kushboo Sundar celebrates Diwali and shares super cool photos

குஷ்பு வீட்டில் கொண்டாட்டம் ஸ்டார்ட்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகை குஷ்பு வீட்டில் இப்பவே பண்டிகை களைகட்ட ஆரம்பித்துள்ளது. வீட்டில் முழுவதும் மின் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டு எடுத்த புகைப்படங்களையும் நடிகை குஷ்பு தற்போது வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு வாழ்த்து: அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என நடிகை குஷ்பு சில புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சாந்தனுவின் மனைவி கிகி விஜய், பிருந்தா மாஸ்டர் உள்ளிட்ட பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகை குஷ்புவுக்கும் சுந்தர். சிக்கும் ரசிகர்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Kushboo Sundar celebrates Diwali and shares super cool photos

அரண்மனை 4: இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான வாரிசு படத்தில் குஷ்பு நடித்த நிலையிலும் அவரது காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அரண்மனை 4 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். லால் சலாம், கேப்டன் மில்லர், அயலான் உள்ளிட்ட பெரிய படங்களுடன் அரண்மனை 4 படமும் போட்டியாக ரிலீஸ் ஆக உள்ள நிலையில், வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பதை வெயிட் பண்ணித் தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X