சுந்தர்.சி பார்ட்டியில் விஷால் செய்ததை விடுங்க.. குஷ்பு கொடுத்த பசக் முத்தம்.. வீடியோ வேற லெவல்!
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி கடந்த 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டு, சில காரணங்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் போன படம், மத கஜ ராஜா. இப்படியான நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இப்படியான நிலையில் சுந்தர் சி-யின் பிறந்த நாளும் வர தனது சினிமா நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார். அப்போது நடிகையும், அவரது மனைவியுமான குஷ்பு சுந்தர் சி-க்கு முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார் குஷ்பு, அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
சுந்தர் சி கடந்த 21ஆம் தேதி தனது 57வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இது தொடர்பாக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்தப் பிறந்த நாள், சுந்தர் சி-க்கு மிகவும் சிறப்பான பிறந்த நாள். காரணம், மத கஜ ராஜா படம் தான். 2013ஆம் ஆண்டில் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டப்பட்ட இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட்டே, 13 கோடிகள்தான் என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி பெரும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. படம் இதுவரை, தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 50 கோடிகள் வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சுந்தர் சி: இப்படியான மகிழ்ச்சியில் இருக்கும் சுந்தர் சி, தனது பிறந்த நாளை வெகு விமர்சையாக பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார். அதில் நடிகர் விஷால், விமல், வடிவேலு, யோகி பாபு, நடிகர் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஆர்.ஜே பாலாஜி என பலர் கலந்து கொண்டனர். அதேபோல், நடிகைகளில், மீனா, ஐஸ்வர்யா ராஜேஸ், டிடி நீலகண்டன், வாணி போஜன், ஐஸ்வர்யா, சங்கீதா, பிருந்தா மாஸ்டர் என பலரும் கலந்து கொண்டனர்.
பார்ட்டி : உயர்தர நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த பார்ட்டி செம கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்தப் பார்ட்டி தொடர்பான புகைப்படங்களை கலந்து கொண்ட பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே நடிகை மீனா பகிர்ந்த புகைப்படங்களில் விஷால் மீனாவின் தோள் மீது கை போட்டு நின்று கொண்டு இருந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றது.
முத்தங்கள்: இப்படியான நிலையில் சுந்தர்.சி-யின் மனைவியும் நடிகையுமான குஷ்பு, பிறந்த நாள் பார்ட்டியில் சுந்தர்.சி-க்கு காதலோடு முத்தங்கள் கொடுத்துள்ளார். அதேபோல், சுந்தர்.சி-யும் குஷ்புவிற்கு முத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வீடியோவாக இணைத்த குஷ்பு, தான் நடித்த சிங்கராவேலன் படத்தில் இடம் பெற்றுள்ள, 'இன்னும் என்னை என்ன செய்யப்போகின்றாய் அன்பே அன்பே' என்ற பாடலையும் சேர்த்து பகிர்ந்துள்ளார். குஷ்புவின் இந்த போஸ்ட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் பல திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











