For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட...குஷ்புவின் கூந்தல் ரகசியம் இது தானா...அவரே சொன்ன சீக்ரெட்

    |

    சென்னை : 1980 களில் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. இதுவரை 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ள குஷ்பு, தமிழில் ரஜினி, கமல், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

    Kushboo Sundar revealed her healthy and thick hair secret

    தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார் குஷ்பு. இந்தியாவிலேயே நடிகை ஒருவருக்கு முதலில் கோயில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புவிற்கு தான். அந்த அளவிற்கு அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்தவர் குஷ்பு.

    இவரது க்யூட்டான சிரிப்பை போல் இவரது அடர்த்தியான கூந்தலுக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. தலைமுடியை கோதி விட்டு ஸ்டைல் காட்டுவதில் ஹீரோக்களில் ரஜினி பிரபலம் என்றால், ஹீரோயின்களில் குஷ்பு தான்.

    நடிப்பில் உச்சத்தில் இருந்த போதே டைரக்டர் சுந்தர்.சி.,யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பு. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பு, அரசியல், நடிப்பு என கலக்கி வருகிறார் குஷ்பு. சமீபத்தில் பாஜக.,வில் இணைந்த இவர், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார்.

    தேர்தல் வேலைகளை முடித்து விட்டு தற்போது மீண்டும் நடிப்பிற்கு திரும்பி உள்ள குஷ்பு, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அரசியல், சினிமா என பிஸியாக இருந்தாலும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவான இவர், தொடர்ந்து தனது ஃபோட்டோக்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

    அப்படி இன்று தனது ஹேர்பேக் ரகசியத்தை குஷ்பு பகிர்ந்துள்ளார். அதில் அவர், உங்கள் கூந்தல் இவ்வளவு அடர்த்தியாக இருக்க என்ன காரணம் என பலர் என்னிடம் கேட்கிறார்கள். அதற்கு காரணம் வீட்டில் தயாரிக்கும் ஹேர்பேக் தான். வெந்தயத்தை இரவு முழுவதும் ஊரவைத்து, அடுத்த நாள் அதனுடன் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலைகள் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்க வேண்டும்.

    முதல் முறையாக கமலுடன் கூட்டு சேர்ந்த விஜய் சேதுபதி.. நனவான கனவு.. தரமான சம்பவம் லோடிங்! முதல் முறையாக கமலுடன் கூட்டு சேர்ந்த விஜய் சேதுபதி.. நனவான கனவு.. தரமான சம்பவம் லோடிங்!

    பிறகு அதனுடன் தயிர், முட்டைகள், சில துளி லாவண்டர் அல்லது ரோஸ்மேரி ஆயில் சேர்த்து ஒரு மணி நேரம் தலையில் பேக் போட்டு, நல்ல ஷாம்பு சேர்த்து அலச வேண்டும். இது தான் எனது ஃபேமசான ஆரோக்கியமான, வலிமையான, அடர்த்தியான ஹேர்பேக் ஹோம் ரெமிடி என குறிப்பிட்டுள்ளார். தான் ஹேர்பேக் போட்ட ஃபோட்டோவுடன் குஷ்பு இதனை வெளியிட்டுள்ளார்.

    English summary
    Kushboo Sundar revealed her healthy and thick hair secret in instagram post. She explained that how to make the homeremidy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X