தோழி வீட்டுக்குப் போய்.. கட்டிப் பிடிச்சு.. உம்மா கொடுத்த பிருந்தா.. செம குஷ்பு!
சென்னை : ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளரான குஷ்பு பிரச்சாரத்திற்கு இடையே நடன இயக்குனர் பிருந்தாவை சந்தித்தார்.
அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
குஷ்புவும் நடன இயக்குனர் பிருந்தாவும் நீண்டகால இணை பிரியா நண்பர்கள் ஆவர்.

வெற்றி நாயகி
90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகர் குஷ்பூ. இவர் கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனால் முன்னணி நடிகர் என்று பெயரும் எடுத்து வெற்றி நாயகியாக இன்று வரை வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

பாஜக வேட்பாளர்
இவர், கடந்த 2006-ம் ஆண்டு திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர், அங்கிருந்து தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதைதொடர்ந்து, கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது, சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தீவிர பிரச்சாரம்
கடந்த வாரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த குஷ்பு, ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது பிரச்சாரம் தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

பிருந்தாவுடன்
அந்த வகையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை குஷ்பு, தனது நீண்ட நாள் தோழியான நடன இயக்குனர் பிருந்தாவின் வீட்டுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நீ இன்றி நான் இல்லை
அதில், என்னுடைய உயிர் தோழி என்னை வாழ்த்தி முத்த மழையால் என்னை வாழ்த்திய போது என கூறியுள்ளார். மேலும் என் வாழ்க்கையில் நீ இல்லாமல் நான் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் அனைவரின் கவனத்தையும் பெற்று வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











