தீபிகா படுகோனேவின் உடை பற்றி விமர்ச்சிக்க யாருக்கும் தகுதியில்லை: குஷ்பு

By Mayura Akilan

தீபிகா படுகோனே உடை அணிவதைப் பற்றி விமர்ச்சிக்க ஊடகங்களுக்கு யாரும் உரிமை கொடுக்கவில்லை. அதுபற்றி விமர்ச்சிக்கும் தகுதி யாருக்கும் இல்லை என்றும் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

கவர்ச்சிப்படம்

கவர்ச்சிப்படம்

ஞாயிறன்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா' என்ற நாளிதழ் தனது இணைய தளத்தில் தீபிகா படுகோனே கவர்ச்சியை அதிக அளவு வெளிக்காட்டும் ஒரு உடையை அணிந்திருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. அதனை அந்த பத்திரிக்கையின் டிவிட்டர் தளத்திலும் அந்த பத்திரிக்கை பகிர்ந்திருந்தது.

தீபிகா கோபம்

தீபிகா கோபம்

இதற்கு கோபமாக பதிலளித்த நடிகை தீபிகா படுகோனே தான் ஒரு பெண் என்பதால் தனக்கு மார்பகங்கள் இருப்பதாகவும், கிளிவேஜ் இருப்பதாகவும் அது குறித்து அந்த பத்திரிக்கைக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அகற்றிய டைம்ஸ் ஆம் இந்தியா

அகற்றிய டைம்ஸ் ஆம் இந்தியா

அதற்கு பதிலளித்த அந்த பத்திரிக்கை, அது தீபிகாவிற்கு அளிக்கப்பட்ட பாராட்டாக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தது. எனினும் அந்த புகைப்படத்தையும், அந்த ட்வீட்டையும் அந்த பத்திரிக்கை உடனடியாக அகற்றிவிட்டது.

பழைய புகைப்படம்

பழைய புகைப்படம்

கடந்த ஆண்டு நடந்த ஒரு திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு தீபிகா அணிந்திருந்த ஆடையின் புகைப்படம் அது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி பத்திரிகையாக கூறப்படும் பத்திரிக்கை வெளியிட்டிருக்கும் இந்த தகவல் ஒரு செய்தியா என்று தீபிகா தனது டிவிட்டர் கணக்கில் கோபத்தை வெளிப்படுத்தினார்.

பெண்களுக்கான மரியாதை

பெண்களுக்கான மரியாதை

அத்துடன் பெண்களுக்கு மரியாதை அளிக்க தெரியாத பட்சத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து நீங்கள் பேசக்கூடாது என்றும் அந்த நடிகை தெரிவித்திருந்தார். தீபிகாவின் கருத்துக்கு பல பாலிவுட் பிரபலங்களும் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் டிவிட்டரில் ஆதரவு அளித்திருந்தனர்.

குஷ்பு ஆதரவு

குஷ்பு ஆதரவு

இந்த சர்ச்சை குறித்து பிபிசி தமிழோசைக்கு பேட்டி அளித்துள்ள நடிகை குஷ்பு, இந்தியாவில் தீர்க்கப்படாத எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது ஏன் தீபிகா படுகோனேவின் ஆடை பற்றி பேசவேண்டும் என்று கேட்டுள்ளார்.

இப்போது என்ன அவசியம்

இப்போது என்ன அவசியம்

ஒரு வருடத்திற்கு முன்னர் அணிந்த ஆடை அது. அதுவும் டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டு இப்போது ஏன் செய்திகள் வெளியிடப்படுகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலை வெட்டி இல்லையா?

வேலை வெட்டி இல்லையா?

தீபிகா உடையணிந்த விதம் குறித்து விவாதிக்கும் அளவுக்கு இந்தியாவில் ஆட்கள் வேலையில்லாமல் இருக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

என்ன சம்பந்தம்?

என்ன சம்பந்தம்?

பேசுறவங்களுக்கும் சர்ச்சை பண்றவங்களுக்கு என்ன தொடர்பு என்று கேட்ட அவர், தீபிகாவின் உடையைப் பற்றி பேசவும், விமர்சனம் பண்ணுவதற்கும் யார் உரிமை கொடுத்தது என்றும் குஷ்பு கேட்டுள்ளார்.

யாரை கேட்க வேண்டும்?

யாரை கேட்க வேண்டும்?

தீபிகா படுகோனே பிரபலமான நடிகை என்பதால்தான் இப்படி விமர்சனம் செய்கின்றனர். இந்த விசயத்தில் தீபிகாவின் தைரியத்தை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ள குஷ்பு யாரையும் கேட்டுக்கொண்டுதான் ஆடை அணியவேண்டுமா? என்று கொதித்துள்ளார்.

யாருக்கும் வேலை வெட்டியில்லையா?

யாருக்கும் வேலை வெட்டியில்லையா?

ஊடகத்திற்கு விமர்சனம் செய்வதற்கு அதிகாரம் கொடுத்தது யாரு. அவங்க வீட்டு பெண்களை நாங்க விமர்சனம் செய்றோமா? வேற யாராவது இதுபோல ஆடை அணிந்திருந்தால் யாரும் பேசியிருக்க மாட்டார்கள். தீபிகா படுகோனே என்பதால் விமர்சனம் செய்கின்றனர் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X