Exclusive: குஷ்பு டீம் என்னை ஏமாற்றிவிட்டது.. கொந்தளிக்கும் லட்சுமி ஸ்டோர்ஸ் நடிகை நந்திதா ஜெனிபர்!

லட்சுமி ஸ்டோர்ஸ் நாடகக் குழுவினர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை நந்திதா ஜெனிபர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

கொந்தளிக்கும் லட்சுமி ஸ்டோர்ஸ் நடிகை நந்திதா ஜெனிபர்- வீடியோ

சென்னை: குஷ்புவின் லட்சுமி ஸ்டோர்ஸ் நாடகக் குழுவினர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை நந்திதா ஜெனிபர் புகார் தெரிவித்துள்ளார்

ரிதம், முத்தம், அற்புதம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க உள்ளிட்ட பல படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்தவர் நடிகை நந்திதா ஜெனிபர். சமீபத்தில் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் குஷ்பு நடிக்கும் லட்சுமி ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடித்தார்.

ஆனால் திடீரென அவர் நாடகத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். அவருக்கு பதிலாக வேறு ஒருவர் அந்த ரோலில் நடித்து வருகிறார்.

லட்சுமி ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து திடீரென காணாமல் போனது குறித்து நந்திதா ஜெனிபரிடம் விசாரித்தோம். அவர் நம்மிடம் கூறியதாவது,

சினிமாவில் பல ஆண்டுகள்

சினிமாவில் பல ஆண்டுகள்

"சினிமாவில் நான் பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன். எனது தந்தை ஒரு நடன இயக்குனர். அதன் காரணமாகவே நான் நடிக்க வந்தேன். நாகவள்ளி, புவனேஸ்வரி உள்ளிட்ட தொடர்களில் ஏற்கனவே நடித்தேன். தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். மேலும் சில தமிழ் படங்களில் நடித்து வருகிறேன்.

லட்சுமி ஸ்டோர்ஸ் வாய்ப்பு

லட்சுமி ஸ்டோர்ஸ் வாய்ப்பு

இந்நிலையில் தான் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் வாய்ப்பு வந்தது. அதில் எனக்கு குஷ்பு மேடத்துக்கு அடுத்தப்படியான நாயகி வேடம் என்று தான் முதலில் கூறப்பட்டது. அதனால் தான் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

எனக்கு பதில் நட்சத்திரா

எனக்கு பதில் நட்சத்திரா

மூன்று மாதங்கள் படப்பிடிப்பு போன பிறகு, திடீரென நட்சத்திரா நடிக்க வந்தார். அப்போது தான் எனக்கு தெரிந்தது, எனக்கு கூறப்பட்ட ரோலில் அவர் நடிக்கிறார் என்பது. இதுகுறித்து இயக்குனர் மற்றும் கதாசிரியரிடம் முறையிட்டேன். ஆனால் அவர்கள் மழுப்பலாகவே பதில் அளித்தனர்.

ஏமாற்றிவிட்டனர்

ஏமாற்றிவிட்டனர்

குஷ்பு மேடம் ஒரு சீனியர் நடிகை. அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. லட்சுமி ஸ்டோர்ஸ் நாடகக்குழுவினர் என்னை ஏமாற்றிவிட்டனர். நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு, துணை நடிகையாக்கிவிட்டனர். இதனால் மனமுடைந்து தான் அந்த நாடகத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன்.

துணை நடிகையாக்கப்பட்டேன்

துணை நடிகையாக்கப்பட்டேன்

துணை நடிகையாக நடிப்பதென்றால், அதை நான் சினிமாவிலேயே செய்துவிட்டு போகிறேன். நான் ஏன் தொலைக்காட்சி தொடரில் துணை நடிகையாக நடிக்க வேண்டும். நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு எதுவும் தெரியாது. அதனால் பெரிய பட வாய்ப்பு கைநழுவி போய்விட்டன. ஆனால் நான் இப்போது தெளிவாக இருக்கிறேன். எனக்கு பிடித்ததை மட்டும் தான் செய்வேன்", என நந்திதா ஜெனிபர் கூறினார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X