அழகோ அழகு.. பேரழகு.. குஷ்புவின் எழில் கொஞ்சும் புகைப்படம்!
சென்னை : நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகிவருகிறது.
எப்போதும் அழகுடனும், துடிப்புடனும் பளிங்குச்சிலைபோல இருப்பவர் தான் குஷ்பு. திரைத்துறையில் இருக்கு குஷ் என்று செல்ல பெயரும் உண்டு. தோட்டத்தில் புதிதாக பூத்த மலர் போல பிரகாசிக்கிறார் நடிகை குஷ். நடிப்பு மட்டும் இல்லாமல் அரசியல்,தயாரிப்பு, நடிப்பு என அனைத்து துறைகளிலும் தன் திறமை மேலும் பிரகாசிக்கிறார் குஷ்பு.

இவரின் தமிழ் உச்சரிப்புக்கும், இவரின் பேச்சுத் திறமைக்கும் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மற்றவர்களை ஈர்க்கும் இவர் பேசும் அழகும்.
சினிமாவில் வாய்ப்பு குறைந்தவுடன் சின்னத்திரையில் நுழைந்து, சின்னத்திரையிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார் குஷ். சின்னத்திரையில் இருந்தாலும், அவ்வப்போது சினிமாவிலும் பல முக்கிய கதாபாத்திரங்கள் இவரைத் தேடி வந்தன. பப்ளியான நடிகையை ராசிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன? ஒல்லியான சும்ம சிக்குனு இருக்கும் ஹீரோயின்களுக்கு எவ்வளவு சான்ஸ் இருக்கிறதோ அதே அளவு பப்ளி ஹீரோயின்களுக்கும் வாய்ப்பு உண்டு என்று நிரூபித்தவர் குஷ்பு.

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் கமலுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பாகவும் ,வைரலாகவும் பரவிவந்து கொண்டிருந்த நிலையில், இவர் வெளியிட்டுள்ள மற்றொரு புகைப்படம் ரசிகர்களை வாய் பிளக்கவைத்தது. வயதுக்கும் , அழகுக்கும் சம்மந்தம் இல்லை என்னும் அளவிற்கு இருந்தது அந்த புகைப்படம்.
எந்த உடை என்றாலும் கனகச்சிததாக பொருந்திவிடும் உடல் பாங்கு இவருக்கு, ஹாப் வைட் புடவை, அழகான நெற்றியில் பெரிய குங்கும போட்டு என சும்மா கலக்கலாக வித வித போஸ் கொடுத்துள்ளார். சமூகவலைத்தளத்தில் இந்த புகைப்படம் தான் ட்ரெண்ட்.
ஊரடங்கு நேரத்தில் அனைத்து நடிகைகளும் தனது அன்றாட வேலைகளை வீடியோவாக பதிவிடுகின்ற நிலையில்,குஷ் வெளியிட்ட ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு மிகவும் சந்தோசத்தை தந்துள்ளது.
வெண்ணிலா ஐஸ் கிரீம் மேல் செர்ரி பழம் வைத்தது போல செம அழகு நீங்க என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். இது போல் பல புகைப்படங்களை வெளியிடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











