“அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு

ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்ததாகத் தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.

Recommended Video

Kushboo controversial Tweet | 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு

சென்னை: மன்னன் படத்தில் நடிக்கும் போது ரஜினிகாந்தை ரொமான்ஸ் செய்யப் பயந்ததாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்புவுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்திய சினிமாவில் முதல்முறையாக ஒரு நடிகைக்கு கோயில் கட்டப்பட்டது அவருக்கு தான். அந்த அளவுக்கு கொடிக்கட்டி பறந்தவர்.

குஷ்புவுடன் ஜோடி போடாத ஹீரோக்களே இல்லை. தமிழ் மட்டுமின்றி பிற மொழி சினிமாக்களிலும் கலக்கியவர் குஷ்பு. இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டிலான குஷ்பு, இப்போது பிஸியான அரசியல்வாதி. அதேசமயம் சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.

குஷ்பு தற்போது நடிகர் ரஜினி குறித்து ஒரு டிவீட் செய்துள்ளார். மன்னன் படத்தில் நடித்த போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, " தற்செயலாக இந்த புகைப்படம் கிடைத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினியை ரொமான்ஸ் செய்ய எவ்வளவு நடுங்கினேன் என்பது இப்போதும் என் நினைவில் இருக்கிறது", என குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த நடிப்பு

குஷ்புவின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியாகிவிட்டனர். "உண்மையில் நீங்க நடுங்குனீங்களா? திரையில் பார்க்கும் போது தெரியவே இல்ல. நீங்கள் சொல்வது உண்மை என்றால் அது ஒரு சிறந்த நடிப்பு", என ஒரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

காலாவில் ஜோடி

மற்றொரு ரசிகரோ மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு காலா படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை. ஈஸ்வரி ராவ் கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்திருக்கலாம் என ஒருவர் கூறியுள்ளார்.

மன்னன் படம்

மன்னன் படம்

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, விஜயசாந்தி, குஷ்பு, கவுண்டமணி, மனோரமா, விசு உள்ளிட்டோர் நடித்த படம் மன்னன். கடந்த 1991ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. குஷ்புவும், ரஜினியும் காதலித்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் விஜயசாந்தியை கல்யாணம் செய்து கொள்வார் ரஜினி. இப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்துமே ஹிட்டாயின.

ராஜாதி ராஜா பாடல்

ராஜாதி ராஜா பாடல்

குஷ்பு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படமும் கூட, அப்படத்தில் இடம்பெற்ற ‘ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்..' பாடலில் வருவது தான். மேலும் மன்னன் படத்தின் 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' பாடல், என்றென்றும் தாய்ப்பாசத்தை போற்றும் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று. குஷ்புவின் இந்தப் பதிவைத் தொடர்ந்து ரசிகர்களும், தங்களுக்கு அப்படத்தில் பிடித்தமான காட்சிகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X