twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குஷ்புவுக்கு சரத்குமார் திடீர் ஆதரவு சென்னை:மேட்டூர் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த குஷ்பு மீது செருப்பு, அழுகிய தக்காளி, முட்டைகளை வீசியவர்கள் மீது தமிழக அரசுநடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.தமிழக பெண்களின் கற்பு குறித்து பேசிய குஷ்புவுக்கு எதிராக மேட்டூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அதில்பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பின், சரணடைய வந்தார்.அப்போது பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் குஷ்புவுக்குஎதிராக போராட்டத்தில் இறங்கினர். அவர் மீது செருப்புகள், முட்டைகள், தக்காளிகள் வீசப்பட்டன. இதையடுத்து அவர்கள் மீதுபோலீசார் தடியடி நடத்தினர்.இச் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட கலெக்டரிடம் தமிழக அரசு அறிக்கை கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து மேட்டூர்தாசில்தார் பயாஸ் முகம்மது கானிடம் அறிக்கை கேட்டார் கலெக்டர் சுகுமாறன்.இதைத் தொடர்ந்து பயாஸ் கான் கலெக்டரிடம் 2 பக்க அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையோடு மேட்டூர்நீதிமன்றத்துக்கு வெளியே கூடியிருந்தவர்கள் போராட்டம் நடத்தியபோது போலீசார் எடுத்த வீடியோவின் டேப்பும்,புகைப்படங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அந்த வீடியோவையும் படங்களையும் ஆதாரமாக வைத்து சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்ததாக பாமக, விடுதலைச் சிறுத்தைகள்மீது வழக்குகள் போடப்படும் என்று தெரிகிறது.குஷ்புவுக்கு சரத்குமார் ஆதரவு:இதற்கிடையே நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் சரத்குமார் அளித்துள்ள பேட்டியில், குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது:குஷ்புவை நாங்கள் கைவிட மாட்டோம். அவர் சொன்னது அவரது சொந்தக் கருத்து. அதில் நடிகர் சங்கத்துக்கு தொடர்பில்லை.ஆனால் குஷ்புவுக்கு எதிர்ப்பு காட்டுகிறோம் என்று செருப்பு, துடைப்பக்கட்டை, முட்டை ஆகியவற்றை வீசும் சம்பவங்கள்நடப்பதும், குஷ்பு அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருவகும் சரியல்ல.குஷ்பு, சுகாசினிக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து எல்லா நடிகர்களிடமும் பேசி வருகிறோம். இது தொடர்பாக என்னநடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்.இந்த விவகாரத்தை முதல்வர் ஜெயலலிதாவிடமும் மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடமும் எடுத்துச் செல்வோம்.குஷ்பு, சுகாசினிக்கு எதிரான போராட்டங்களை நடிகர் சங்கம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. அதே நேரத்தில் நடிகர்,நடிகைகள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். அவர்களது பேச்சு நடிகர் சங்கத்தை பாதிப்பதை மனதில் கொள்ள வேண்டும்என்றார்.கோவையில் சுகா மீது 3 வழக்கு:இதற்கிடையே கோவையில் மூன்று நீதிமன்றங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் சுகாசினி மீது மேலும் 3 வழக்குகள்தொடரப்பட்டுள்ளன. இதில் 2 வழக்குகளில் வரும் 30ம் தேதி விசாரணை நடக்கிறது.

    By Staff
    |

    சென்னை:


    மேட்டூர் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த குஷ்பு மீது செருப்பு, அழுகிய தக்காளி, முட்டைகளை வீசியவர்கள் மீது தமிழக அரசுநடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

    தமிழக பெண்களின் கற்பு குறித்து பேசிய குஷ்புவுக்கு எதிராக மேட்டூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அதில்பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பின், சரணடைய வந்தார்.

    அப்போது பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் குஷ்புவுக்குஎதிராக போராட்டத்தில் இறங்கினர். அவர் மீது செருப்புகள், முட்டைகள், தக்காளிகள் வீசப்பட்டன. இதையடுத்து அவர்கள் மீதுபோலீசார் தடியடி நடத்தினர்.

    இச் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட கலெக்டரிடம் தமிழக அரசு அறிக்கை கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து மேட்டூர்தாசில்தார் பயாஸ் முகம்மது கானிடம் அறிக்கை கேட்டார் கலெக்டர் சுகுமாறன்.

    இதைத் தொடர்ந்து பயாஸ் கான் கலெக்டரிடம் 2 பக்க அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையோடு மேட்டூர்நீதிமன்றத்துக்கு வெளியே கூடியிருந்தவர்கள் போராட்டம் நடத்தியபோது போலீசார் எடுத்த வீடியோவின் டேப்பும்,புகைப்படங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    அந்த வீடியோவையும் படங்களையும் ஆதாரமாக வைத்து சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்ததாக பாமக, விடுதலைச் சிறுத்தைகள்மீது வழக்குகள் போடப்படும் என்று தெரிகிறது.

    குஷ்புவுக்கு சரத்குமார் ஆதரவு:

    இதற்கிடையே நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் சரத்குமார் அளித்துள்ள பேட்டியில், குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


    அவர் கூறியுள்ளதாவது:

    குஷ்புவை நாங்கள் கைவிட மாட்டோம். அவர் சொன்னது அவரது சொந்தக் கருத்து. அதில் நடிகர் சங்கத்துக்கு தொடர்பில்லை.ஆனால் குஷ்புவுக்கு எதிர்ப்பு காட்டுகிறோம் என்று செருப்பு, துடைப்பக்கட்டை, முட்டை ஆகியவற்றை வீசும் சம்பவங்கள்நடப்பதும், குஷ்பு அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருவகும் சரியல்ல.

    குஷ்பு, சுகாசினிக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து எல்லா நடிகர்களிடமும் பேசி வருகிறோம். இது தொடர்பாக என்னநடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்.

    இந்த விவகாரத்தை முதல்வர் ஜெயலலிதாவிடமும் மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடமும் எடுத்துச் செல்வோம்.

    குஷ்பு, சுகாசினிக்கு எதிரான போராட்டங்களை நடிகர் சங்கம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. அதே நேரத்தில் நடிகர்,நடிகைகள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். அவர்களது பேச்சு நடிகர் சங்கத்தை பாதிப்பதை மனதில் கொள்ள வேண்டும்என்றார்.

    கோவையில் சுகா மீது 3 வழக்கு:

    இதற்கிடையே கோவையில் மூன்று நீதிமன்றங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் சுகாசினி மீது மேலும் 3 வழக்குகள்தொடரப்பட்டுள்ளன. இதில் 2 வழக்குகளில் வரும் 30ம் தேதி விசாரணை நடக்கிறது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X