தலைவர் 168... குஷ்புவுக்கு கொஞ்சம் பதட்டம், கொஞ்சம் உற்சாகம்...

By

Recommended Video

Thalaivar 168 gear start today | Rajinikanth | Meena | Kusbhu

சென்னை: ரஜினி படத்தில் நடிக்க இருப்பதால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் பொங்கலுக்கு வர இருக்கிறது. இதையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார்.

குஷ்பு, மீனா

குஷ்பு, மீனா

இந்தப் படத்தில் குஷ்புவும் மீனாவும் ரஜினிக்கு மனைவிகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் யாரும் இதை உறுதிப்படுத்தவில்லை. இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் நடந்துவருகிறது.

வலிமை ஷூட்டிங்

வலிமை ஷூட்டிங்

அங்கு, ஏற்கனவே அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஷுட்டிங்கும் நடந்துவருகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்கி வருகிறார். இரண்டு படக்குழுவினரும் ஒரே ஓட்டலில்தான் தங்கியுள்ளனர்.

பதட்டம் உற்சாகம்

பதட்டம் உற்சாகம்

இந்நிலையில் ரஜினியுடன் நடிக்க போவதால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி டிவிட்டரில் அவர், ஐதராபாத் வந்துவிட்டேன். நாளை முதல், தலைவர் 168 படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன். இதனால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. அதே நேரம் உற்சாகமாகவும் இருக்கிறது.

வாழ்த்துகள் நண்பர்களே..

வாழ்த்துகள் நண்பர்களே..

மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நண்பர்களே என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ரஜினி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஏராளமானோர் இதை ரீவிட்டும் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X