அற்புதமான சக நடிகர்.. நடிகர் பிரபுவுக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன பிரபல நடிகை குஷ்பு!

By

சென்னை: நடிகர் பிரபுவின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகை குஷ்பு சிறப்பு வாழ்த்தை அவருக்குத் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் சிவாஜியின் இளைய மகன், நடிகர் பிரபு. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்தவர்.

இப்போது கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். தமிழ் தவிர தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

கன்னக்குழி அழகர்

கன்னக்குழி அழகர்

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சில ரசிகர்கள், உங்களுக்கு எப்போதும் வயதாவதே இல்லை. கன்னக்குழி அழகர் நீங்கள் என்று வாழ்த்தியுள்ளனர். என் சிறுவயதில் இருந்தே நான் உங்கள் ரசிகர் என சில ரசிகர்கள் கூறியுள்ளனர்,

வாழ்த்துகள் அப்பா

நடிகரும் அவர் மகனுமான விக்ரம் பிரபு, ட்விட்டரில் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்தில், தங்கமான மனிதரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. வாழ்த்துகள் அப்பா. என்றென்னும் எனக்குப் பிடித்த ஹீரோ நீங்கள் என்று கூறியுள்ளார். கூடவே, நடிகர் பிரபுவுடன் தனது சிறுவயதில் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

பிரபு -குஷ்பு கெமிஸ்ட்ரி

பிரபு -குஷ்பு கெமிஸ்ட்ரி

அந்த போட்டோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகை குஷ்புவும் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 90-களில் பிரபு -குஷ்பு இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர். அவர்களின் கெமிஸ்ட்ரி திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப் பட்டது.

சூப்பர் ஹிட்

சூப்பர் ஹிட்

சின்னதம்பி, மைடியர் மார்த்தாண்டன், பாண்டிதுரை, உத்தமராசா, தர்மசீலன், சின்ன வாத்தியார் உட்பட பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். இந்தப் படங்களில், சூப்பர் ஹிட்டான சின்னதம்பி படம், இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

இளைய திலகம்

நடிகர் பிரபுவுக்கு குஷ்பு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், அற்புதமான சக நடிகர், எனது வாழ்வில் முக்கிய நண்பரான இளைய திலகம் பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X