For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  லவ் யூ பிரதர்.. குஷ்பு மகள் ட்வீட்.. ஹிப்ஹாப் ஆதி பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDHiphopTamizha

  |
  HIP HOP THAMIZHA LIVE PERFORMANCE | NAAN SIRITHAL AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL

  சென்னை: இளைஞர்களின் இதயத் துடிப்பை நன்கு அறிந்து கொண்டு, சிங்கிள் பசங்க, வாடி புள்ள வாடி, எனக்கு பிரேக்கப் என ஆடி, பாடி நடித்து அட்டகாசம் செய்யும் ஹிப்ஹாப் ஆதியின் பிறந்த நாள் இன்று.

  ஹிப்ஹாப் பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆதி, இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் தனது பன்முகங்களை வெளிக்காட்டியுள்ளார்.

  இன்று தனது 29வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ஹிப்ஹாப் ஆதிக்கு அவரது ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் #HBDHiphopTamizha என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  இயக்குநர் சுந்தர். சி மற்றும் நடிகை குஷ்புவின் மகள் அனி சுந்தரும் ஆதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்

  முதல் பாட்டு

  விஜய் ஆண்டனியின் ‘நான்' படத்தில் வரும் "தப்பெல்லாம் தப்பே இல்லை" பாடலை பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, அனிருத் இசையில் உருவான சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் படத்தின் டைட்டில் சாங் பாடலை ஹனி சிங்குடன் இணைந்து பாடி இருந்தார். மேலும், வணக்கம் சென்னை படத்தில் வரும் சென்னை சிட்டி கேங்ஸ்டர் பாடலிலும் அனிருத்துடன் இணைந்து கலக்கி இருப்பார்.

  சுந்தர். சி அறிமுகம்

  சுந்தர். சி அறிமுகம்

  தமிழ் சினிமாவில் தொடர்ந்து பாடல்களை பாடியும், எழுதியும் வந்த ஹிப்ஹாப் ஆதிக்கு, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் ஆதி போட்ட அத்தனை பாட்டுக்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்துக்கும் ஆதி இசையமைத்து அசத்தியிருந்தார்.

  கோலிவுட்டின் புது ஹீரோ

  கோலிவுட்டின் புது ஹீரோ

  கோவையில் இருந்து சென்னைக்கு சாதிக்க கிளம்பி வந்த ஹிப்ஹாப் ஆதி, பாடல்கள் பாடுவது, இசையமைப்பதை தாண்டி, சுந்தர்.சி தயாரிப்பில், மீசையை முறுக்கு எனும் படத்தை இயக்கி நடித்து, கோலிவுட்டின் ஹீரோவாக மாறினார். மீசையை முறுக்கு வெற்றியைத் தொடர்ந்து, நட்பே துணை, நான் சிரித்தால் படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார்.

  நண்பர்கள் தான் சொத்து

  நண்பர்கள் தான் சொத்து

  திறமையும், விடா முயற்சியும் மட்டுமல்ல ஹிப்ஹாப் ஆதிக்கு தனது நண்பர்களின் சப்போர்ட் தான் பெரிய சொத்தாகவும் பலமாகவும் தொடர்ந்து வருகிறது. யூடியூபர்ஸ் வளர்ச்சியையும், அவர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை அறிந்த ஆதி, தனது மீசையை முறுக்கு படத்திலேயே அத்தனை திறமையான யூடியூபர்களையும் களம் இறக்கி வெற்றிக் கண்டார்.

  ஜல்லிக்கட்டு போராட்டம்

  ஜல்லிக்கட்டு போராட்டம்

  "கிளப்புல மப்புல, திரியுற பொம்பள" பாட்டு மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ஆதி, "வாடி புள்ள வாடி" பாடலில் காதலை பிரிக்கும் சாதி வெறிக்கு எதிராக ஆல்பம் பாடல் போட்டிருந்தார். மேலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, "இது மாட்டை பத்தின பிரச்சனை இல்லை.. நாட்டை பத்தின பிரச்சனை" என்ற பாடலையும் போட்டு வைரலாக்கினார்.

  லவ் யூ பிரதர்

  எங்கள் வாழ்க்கையில் எப்படி வந்து நீங்க நுழைந்தீர்கள் என்று எனக்கு தெரியலை.. ஆனால், எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் தொடர்வது சந்தோஷம், ஹேப்பி பர்த்டே அண்ணா.. வி லவ் யூ என குஷ்புவின் மகள் அனி சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு, ஹிப்ஹாப் ஆதியை வாழ்த்தியுள்ளார்.

  மாஸ் பிஜிஎம்

  பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் இன்றைய ஃபேவரைட் இளம் நடிகராக ஹிப்ஹாப் தமிழா ஆதி வலம் வருகிறார். தனது படங்களில், தனக்கான மாஸ் பிஜிஎம்களை தானே போட்டு, நடித்து, அசத்தும் திறமை கொண்ட ஆதியை ரசிகர்கள் ட்விட்டரில் தொடர்ந்து வாழ்த்தி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  இது எப்போ

  தமிழ் சினிமாவில் மட்டும் தான் நடிகர்கள் நடிக்க வந்த உடனேயே, அவர்களை தலைவராக பார்க்கும் மனோபாவம் பெருகி வருகிறது. சினிமாவை தாண்டி, சமூக அக்கறை கொண்டவர் தான் ஹிப்ஹாப் ஆதி, ஆனால், இப்படி வருங்காலமே என்றெல்லாம் போட்டு அவரது படங்கள் ரிலீஸ் ஆவதற்கும் வேட்டு வைத்து விட வேண்டாம்.

  English summary
  Hiphop Aadhi Birthday hashtag trending in twitter. Kushboo daughter and fans send their wishes to Hiphop Tamizha.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X