மு.க. அழகிரி மகனின் 'வடகறிக்கு' குஷ்பு வாழ்த்து
சென்னை: திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதி அழகிரி தயாரிக்கும் வடகறியின் படத்துக்கு நடிகையும் திமுக பிரமுகருமான குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் துரைதயாநிதி அழகிரியின் சினிமா தயாரிப்பு சற்றே முடங்கிக் கிடந்தது. பின்னர் கிரானைட் முறைகேடு வழக்கில் பல மாதங்கள் துரைதயாநிதி அழகிரி தலைமறைவாகவேண்டிய நிலை வந்தது.
ஒருவழியாக மீண்டும் திரை தயாரிப்பு பிரவேசத்தை அண்மையில் தொடங்கினார் துரைதயாநிதி அழகிரி. இந்த வரிசையில்தான் துரைதயாநிதி தயாரிக்கும் படம் வடகறி

ஜெய், ஸ்வாதி
துரைதயாநிதி அழகிரியின் வடகறி படத்தின் நாயகன் ஜெய், நாயகி ஸ்வாதி.. தயாநிதி அழகிரியின் மீகா எண்டர்டெயின்மென்ட் பெயரில் இப்படம் தயாரிக்கப்படுகிறது. படத்தின் இயக்குநர் சரவணராஜன்.

வடகறி ஷூட்டிங்
துரைதயாநிதி நேற்று இரவு தமது ட்விட்டர் பக்கத்தில் வடகறி திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை (இன்று) முதல் தொடங்க உள்ளது. உங்கள் அனைவரது வாழ்த்துகளும் எங்களுக்கு தேவை என்று ட்விட்டரில் பதவிட்டிருந்தார்.

குஷ்பு வாழ்த்து
துரைதயாநிதி அழகிரியின் இந்த ட்விட்டர் பக்க அறிவிப்புக்கு தொடர்ச்சியாக வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த வாழ்த்துகளில் முக்கியமானது நடிகையும் திமுக பிரமுகருமான குஷ்புவினுடையது.

அப்ப மு.க. அழகிரி அணியில் குஷ்பு?
திமுகவில் மு.க.ஸ்டாலினை பகிரங்கமாக எதிர்ப்பவர் மு.க. அழகிரி. அவருக்கு அடுத்து ஸ்டாலினுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர்களிடம் அடி வாங்கியவர் நடிகை குஷ்பு மட்டும். அவர் கருணாநிதி கோஷ்டி என்று சொல்லப்படுவது உண்டு. சில காலம் திமுகவில் ஒதுக்கப்பட்டு இருந்த நடிகை குஷ்பு அண்மையில் தஞ்சாவூரில் டெசோ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று ரீ என்ட்ரியை நிரூபித்தார். தற்போது அழகிரி மகனுக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். அப்படியானால் மு.க. அழகிரி அணியில் குஷ்பு இணைந்துவிட்டாரா என்று நறநறக்கின்றனர் ஸ்டாலின் அணியினர்.


Click it and Unblock the Notifications











