Kushi Box Office: ஜஸ்ட் பாஸ் ஆன சமந்தா... குஷி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

சென்னை: விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் நேற்று (செப் 1) வெளியானது.

சிவ நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.

ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள குஷி, பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் நம்பிக்கை கொடுத்துள்ளது.

சமந்தாவுக்கு கம்பேக் கொடுத்துள்ள குஷி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம்.

 Kushi Box Office: Samantha starrer Kushi collected Rs 16 crore at the box office on its first day

குஷி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்: கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது பான் இந்தியா ஸ்டாராக மாஸ் காட்டி வருகிறார். சமந்தா நடிப்பில் கடைசியாக யசோதா, சாகுந்தலம் படங்கள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து தற்போது குஷி திரைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படம் நேற்று (செப் 1) ரிலீஸானது.

சிவா நிர்வாணா இயக்கியுள்ள குஷி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. யசோதா, சாகுந்தலம் படங்கள் சமந்தாவுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் குஷி படத்தை அதிகம் நம்பியிருந்தார். இந்நிலையில் நேற்று வெளியான குஷி படத்துக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

குஷி திரைப்படம் காதல் பின்னணியில் செம்ம ரொமாண்டிக் மூவியாக உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தனர். முக்கியமாக விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க்அவுட் ஆகியுள்ளதாகவும் ரசிகர்கள் கூறியிருந்தனர். பெரும்பாலான ரசிகர்கள் சமந்தாவுக்காகவே குஷி படத்தை பார்த்ததாக கூறியுள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 Kushi Box Office: Samantha starrer Kushi collected Rs 16 crore at the box office on its first day

அதன்படி, குஷி திரைப்படம் முதல் நாளில் மொத்தமாக 16 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். தெலுங்கில் 10 கோடியும், தமிழ் வெர்ஷன் 6 கோடியும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸ் அளவில் இது சமந்தாவுக்கு நல்ல கம்பேக் என்றே சொல்லப்படுகிறது. சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

அதிலிருந்து சமந்தா மீண்டுவரும் அளவிற்கு குஷி படத்தின் வசூல் அமைந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று குஷி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 10 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகமொத்தம் குஷி திரைப்படம் மூலம் சமந்தா ஜஸ்ட் பாஸ் ஆகிவிட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X