Blue Sattai Maran Kushi Review: குஷி ஃபெயிலா போச்சு.. சமந்தா சந்தோஷத்தை பறித்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: குஷி திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர். இந்நிலையில், குஷி படம் ஃபெயிலா போச்சு என நாத்திக கருத்துடன் ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் சமந்தாவின் சந்தோஷத்தையே கெடுத்து விடும் போல இருக்கே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இயக்குநர் ஷிவ நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, முரளி சர்மா, சச்சின் கடேகர், ரோகிணி, பழம்பெரும் நடிகை லட்சுமி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள குஷி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

முதல் நாளில் இந்த படம் அதிகபட்சமாக 16 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டி நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளதாக கூறி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை டோட்டல் டேமேஜ் செய்துள்ளார்.
நெகட்டிவ் விமர்சனம்: படம் சூப்பராக இருந்தாலே சுமாராகத்தான் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்வார் என்கிற விமர்சனமே அதிகம் இருந்து வரும் நிலையில், சுமாரான படங்கள் என்றால் சோலி முடிஞ்சது என்பது தான் கதை. நிறை குறைகளுடன் வெளியாகி இருந்தாலும் ரசிக்கும் படி குஷி படம் உள்ள நிலையில், இந்த படத்துக்கும் செம நெகட்டிவ் விமர்சனத்தை தற்போது கொடுத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
ஃபெயில் ஆகிடுச்சு: குஷி என பாசிட்டிவ் டைட்டில் வைத்து விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்த குஷி திரைப்படம் கலவையான விமர்சனங்கள் மற்றும் அதிகளவிலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படம் முற்றிலுமாக ஃபெயில் ஆகிடுச்சு என ஒரே போடாக போட்டு சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் சந்தோஷத்தையே கெடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
கொஞ்சம் கூட படம் உப்பு சப்பு இல்லாத கதை என்றும் லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. விஜய் தேவரகொண்டா மட்டும் நல்லா நடிச்சிருக்காரு, மத்தபடி படத்தில் ஒன்றுமே இல்லை என வழக்கம் போல வச்சு செய்துள்ளார். நல்ல திரைக்கதையை எழுதி படமெடுக்காமல் கோயில் கோயிலாக சென்று வேண்டிக் கொண்டால் எப்படி பாஸாக முடியும் என பெரியாரின் கருத்தையும் கூறி இந்த படத்தில் ஏகப்பட்ட மத மூடநம்பிக்கைகள் இருக்கு என்றும் விளாசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











