”கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாட்டு இந்த பழைய பாட்டுல இருந்து சுட்டதா?.. எஸ்.ஜே. சூர்யா ஓபன் டாக்!
சென்னை: இந்த வாரமும் தமிழ் சினிமாவில் 9 புதிய படங்கள் வெளியாகின்றன. கூடவே விஜய்யின் ரீ ரிலீஸ் படமான குஷி திரைக்கு வருகிறது. மேலும், பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓஜி திரைப்படமும் வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற குஷி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய எஸ்.ஜே. சூர்யா பல வருடங்களாக காத்து வைத்திருந்த பல ரகசியங்களை கூறினார்.
குறிப்பாக "கட்டிப்புடி கட்டிப்புடிடா" பாடல் குறித்தும் அந்த ஜோதிகாவின் இடுப்பு சீன் பற்றியும் அவர் பேசியது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. இந்த 2 விஷயமும் அந்த கிளைமேக்ஸ் லிப் லாக் சீனும் இல்லைன்னா படம் ஓடியிருக்குமா? என்பதே டவுட்டு தான் என்றும் கூறியுள்ளார்.

மேலும், "கட்டிப்புடி கட்டிப்புடிடா" பாடல் இன்னமும் ரசிகர்களை கவர காரணமே அது ஒரு சூப்பர் ஹிட்டான பழைய பாடலில் இருந்து சுட்டது தான் காரணம் என்றும் ஓபனாகவே கூறிவிட்டார்.
3 வாட்டி ஒன்ஸ்மோர் கேட்குறீங்க: குஷி படம் மீண்டும் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் அதன் ஸ்பெஷல் ஷோ பத்திரிகையாளர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த படத்தை பற்றி இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா பேசினார். விஜய், மும்தாஜ் நடனமாடிய "கட்டிப்புடி கட்டிப்புடிடா" பாடல் குறித்து பேசிய எஸ்.ஜே. சூர்யா, இப்பவே இந்த பாடலை 3 வாட்டி ஒன்ஸ்மோர் கேட்குறீங்க தியேட்டரில் என்ன ஆகப்போகிறதோ என்றார். மேலும், இந்த பாடல் இத்தனை வருடங்கள் ஆகியும் உங்களுக்கு எல்லாம் பிடிக்க என்ன காரணம் தெரியுமா? என பாடல் உருவான கதையையும் கூறினார்.
செந்தமிழ் தேன்மொழியாள்: ஜி.ஆர். நாதன் இயக்கத்தில் 1958ம் ஆண்டு டி.ஆர். மகாலிங்கம், பண்டரி பாய் நடிப்பில் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி இசையில் வெளியான "அவள் செந்தமிழ் தேன்மொழியாள்" பாடலை தேவா சாரிடம் போட்டுக் காட்டி, அந்த மாதிரி ஒரு மெலோடியாக ஒரு கவர்ச்சி பாடல் வேண்டும் எனக் கேட்டுத்தான் "கட்டிப்புடி கட்டிப்புடிடா" பாடலை வாங்கினேன் என்றார். வைரமுத்துவின் வரிகள், விஜய்யின் கரிஷ்மா, மும்தாஜின் நடன அசைவுகள் என அந்த பாடலை பெரிய ஹிட் ஆக்கிவிட்டது என்றார்.
இடுப்பு சீன் இல்லைன்னா?: விஜய் சாரிடம் கதை சொன்ன போது எந்த ரியாக்ஷனும் இல்லை. அவருக்கு கதை பிடிக்கலையோன்னு நினைச்சிட்டு வேற கதை சொல்லட்டா சார் என்றேன். ஏன் இந்த கதையே நல்லாத்தானே இருக்கு. இதையே பண்ணலாமே என்றார். புடிச்சிருந்தாலே இதுதான் ரியாக்ஷனான்னு அப்போதான் புரிந்துக் கொண்டேன். படத்தில் அந்த ஜோதிகாவின் இடுப்பு சீன் இல்லைன்னா படம் இந்தளவுக்கு ஓடியிருக்குமா என்பது டவுட் தான் என்றும் எஸ்.ஜே. சூர்யா வெளிப்படையாக பேசியது ரசிகர்களை கவர்ந்தது. கில்லி, சச்சின் படங்களை தொடர்ந்து குஷி ரீ ரிலீஸ் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் வெளியாகும் புதிய படங்களுக்கும் குஷி படத்தின் ரீ ரிலீஸ் பெரும் போட்டியாக இருக்கும் என தனஞ்செயன் உள்ளிட்ட பலர் பதிவிட்டுள்ளனர். விஜய் ஒரு பக்கம் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து வரும் நிலையில், இந்த வாரம் தியேட்டரில் குஷியை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











