சினி செய்திகள்
கோவை:
"குஷி படத்தில் இடம் பெற்ற கட்டிப்புடி, கட்டிப்புடிடா.. பாடலுக்கு எதிர்ப்புத்தெரிவித்து அப் படத்தின் ஆடியோ கேசட்டை காந்தி ஆசிரமத்தின் சார்பில் கஸ்தூரிபாமகளிர் அமைப்பினர் தீயிட்டுக் கொளுத்தினர்.
அது தவிர அப் பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்துவுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
கோ வ மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் காந்திர ஆசிரமம்செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தின் சார்பில் பொள்ளாச்சியில் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பின்னர் காந்தீயக் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில், காந்திஆசிரமத்தின் உறுப்பினர்கள் 50 பேர் கலந்து கொண்டு பொது மக்களிடையேவிழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு விளக்கக் கூட்டம் நடத்தினர்.
இந்த விளக்கக் கூட்டத்தில் கஸ்தூரிபா மகளிர் அமைப்பும் கலந்து கொண்டது. காந்திபிறந்தநாளை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
அக் கூட்டத்தில் குஷி படப் பாடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப பட கேஸட்டைகஸ்தூரிபா மகளிர் அமைப்பினர் தீயிட்டுக் கொளுத்தினர். இது குறித்து ஆஸ்ரமச்செயலர் ரங்கநாதன் கூறியதாவது:
"கட்டிப்புடி கட்டிப்புடிடா, கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா என்ற பாடல் ஆபாசம்நிறைந்ததாக உள்ளது. பெண்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிக்கும் வகையில் இந்தப்பாடல் உள்ளது.
அதை விட இதில் பெண் குரல், மிகவும் ஆபாசமானதாக உள்ளது. இப்பாடலைஎழுதிய வைரமுத்துவைக் கண்டித்து கேசட் எரிக்கும் போராட்டத்தை நடத்தினோம்என்றார் அவர்.
இக் கூட்டத்தில் பூரண மதுவிலக்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.திரைப்படங்கள், டிவி தொடர்களில் இடம் பெறும் மது குடிக்கும் காட்சிகளைத் தடுத்துநிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Click it and Unblock the Notifications











