குஸ்கா... சாலை விபத்தின் கோரத்தை சொல்லும் உணர்வுப்பூர்வமான கதை
சென்னை: சாலை விபத்தில் சிக்கிக் கொள்கின்ற ஒரு பெண்ணுடைய வாழ்வை பற்றிய உணர்வு பூர்வமான கதை தான் குஸ்கா. மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை, சாலை விபத்தின் தாக்கத்தை, இது வரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
பீட்சா, பிரியாணி, ஜிகர்தண்டா என்று உணவுப்பொருட்களின் பெயரை சினிமாவிற்கு வைப்பது பேஷனாகி வருகிறது. அந்த வகையில் இது குஸ்கா. எஃப்.எம் கலைக்கூடம் சார்பாக எஸ்.நாராயணன் மற்றும் எஸ்.சரவணகுமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் குஸ்கா திரைப்படத்தில், நாயகனாக கிஷோர் அறிமுகமாக, இணையாக சஸ்வதா நடிக்கிறார்.

இவர்களுடன் இயக்குனர் கம் நடிகர் பாக்யராஜ், ரேகா, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குனர் பி.என்.சி.கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.
அறிமுக இயக்குனர் பி.என்.சி.கிருஷ்ணா ஒரு பன்முகப்பட்ட கலைஞர், இயக்குனர் மற்றும் நடிகர். தனது திரைத்துறைப் பயணத்தை நாடக மேடைகளில் துவங்கி, திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் என அனைத்து தளங்களிலும், இயங்கி வருகின்ற ஒரு திறமையான படைப்பாளி.
சாலை விபத்தில் சிக்கிக் கொள்கின்ற ஒரு பெண்ணுடைய வாழ்வை பற்றிய உணர்வு பூர்வமான கதை தான் குஸ்கா. மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை, இயக்குனர் மிகவும் நளினமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படம் சாலை விபத்தின் தாக்கத்தை, இது வரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி இருக்கிறது.
இத்திரைப்படத்தில் கிஷோர்-சஸ்வதா ஜோடியுடன், இயக்குநர் கம் நடிகர் கே.பாக்யராஜ், ரேகா, அப்புக்குட்டி, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், மயில்சாமி, மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, வெங்கல் ராவ், முல்லை தனசேகர், கோதண்டம், அம்பானி சங்கர், சேலம் சுமதி, அண்ணாதுரை கண்ணதாசன், படத்தின் இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். வில்லனாக ஜெரால்ட் நடித்திருக்கிறார்.
எம்.எஸ்.ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆர்.ஜி.ஆனந்த் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்குனராக கே.கலை நடராஜ் பங்காற்றி இருக்கிறார். சண்டைகாட்சி அமைப்புகளுக்கு ஓம் பிரகாஷ், ஸ்டில்ஸ் கே.பி.பிரபு, நடனம் ஜே.ஜே.சந்துரு, வடிவமைப்பு கம்பம் சங்கர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிகில் முருகன் மக்கள் தொடர்பு பணியை மேற்கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











