கன்னட பிரசாத்-குசூமுக்கு ஜாமீன்
விபச்சார வழக்கில் பிரபல விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத்தின் 3வது மனைவி குசுமுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
தென் மாநிலஙகளில் விபச்சாரத்தை மிகப் பெரிய தொழிலாக நடத்தி வந்தவர் பிரசாத். சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஹோட்டலில் வைத்து போலீஸாரிடம் சிக்கினார். கூடவே 3வது மனைவி குசூமும் கைதானார்.அவர்கள் மீது விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், பெண்களை வேலையில் சேர்த்து விடுவதாக கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் வழக்குகள் போடப்பட்டன.
விபச்சார வழக்கில் ஜாமீன் கோரி குசூம், முதலில் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடியானது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் குசூம்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது. விடுதலை செய்தது. மறு உத்தரவு வரும் வரை தினசரி மத்திய குற்றப் பிரிவு போலீஸில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என குசூமுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Comments
arrest உயர்நீதிமன்றம் கன்னட பிரசாத் குசும் ஜாமீன் மனு தாக்கல் chennai kannada prasad kusum petition prostitute release wife


Click it and Unblock the Notifications