பாரதிராஜாவின்.. குற்றப்பரம்பரை.. வெப் சீரிஸாக மலர்கிறது!

Recommended Video

தர்பார் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக கூடாது | BHARATHIRAJA SPEECH | FILMIBEAT TAMIL

சென்னை : குற்றப்பரம்பரை வரலாற்று கதையை இரண்டரை மணிநேரத்தில் சொல்லி முடிக்க கூடிய கதை கிடையாது அதனால் தான் இந்த கதையை இணைய தொடராக எடுக்க முடிவெடுத்து இருக்கிறேன் என்று பாரதி ராஜா கூறியுள்ளார்.

கிராமத்தையும், அதன் எழில் கொஞ்சும் வனப்பையும், அதில் வாழும் மனிதர்களின் இயல்பான நடைமுறையையும் அப்பட்டமாக வெளிக்கொண்டுவந்து பிரகாசிக்க வைத்தவர்தான் பாசத்திற்குரிய பாரதி ராஜா. இவர் இயற்கையின் மீது ஆழ்ந்த காதலை உடையவர்.

Kutra parambarai web series

சமீப காலமாக இவர் படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டார். தற்போது பாரதிராஜா குற்றப்பரம்பரை வரலாற்றை இணைய தொடராக எடுக்கப்போவதாக அறிவித்தார். அது தொடர்பாக கொடுக்கப்பட்ட நேர்காணல்களில் சில முக்கிய விசயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

நிறைய படங்கள் மற்றும் மேடைகளில் பாரதிராஜா என் இனிய தமிழ் மக்களே என கூறி பேச்சை துவங்குவார் அல்லது படத்தை துவங்குவார். மேடைகளில் நான் இதனை சொல்லி முடித்ததும், சிரிப்பீர்களே அந்த நேரத்தில் என்ன சிந்திப்பீர்கள் என கூறிய பாரதிராஜா. கண்ணீருக்கு தான் காரணம் வேண்டும் சிரிப்புக்கு காரணம் வேண்டாம் என கூறினார்.

Kutra parambarai web series

மேலும் குற்றப்பரம்பரை இரண்டரை மணிநேரத்தில் சொல்லி முடிக்க கூடிய கதை கிடையாது அதனால் தான் இந்த கதையை இணைய தொடராக எடுக்க முடிவெடுத்து இருக்கிறேன் என்று கூறினார்.

இந்த கதை கைரேகை சட்டம் போட்டு பல அப்பாவி மக்களை ஆங்கிலேய அரசாங்கம் வஞ்சித்தது. அதற்கு எதிராக கிளம்பிய புரட்சியை பற்றியதும் அதில் ஈடுபட்ட வீரர்களை பற்றியதும் தான் குற்றப்பரம்பரை கதை என்று கூறினார்.

மேலும் இந்த கதையை இணைய தொடராக எடுக்க காரணம் தற்போது சூழ்நிலையில் இணைய தொடர்களுக்கு நல்ல பட்ஜட் கிடைக்கிறது. 200கோடிகளில் படம் எடுப்பவர்கள் ஆங்கிலேய செட் கிராமத்து செட் என்று அமைத்து விடுவார்கள் ஆனால் நான் சின்ன பட்ஜட்டில் படம் எடுப்பவன் எனக்கு இதுதான் சரியாக இருக்கும் என்று கூறினார்.

Kutra parambarai web series

குற்றப்பரம்பரை படத்திற்கு கமல் தேர்வானாரா என்ற கேள்விக்கு, பதில் கூறிய பாரதிராஜா முதலில் யோசித்தேன் பிறகு கமல் அந்த கதைக்கு செட் ஆக மாட்டார் என்று விட்டுவிட்டேன் என்று கூறினார். கமல் கதைக்காக முடிந்த அளவு தனது உடலழகை மாற்றினாலும் கமல் இதற்கு சற்று ஒற்றுப்போகமாட்டார். ஏனெனில் இந்த கதை பழங்குடியினர் மற்றும் காட்டில் வாழும் மக்களை பற்றியது, அதனால் இன்னும் மூர்க்கதனமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து வருகிறோம் என கூறினார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X