twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவா திரைப்பட விழாவில் 'சோலோ'வாக பங்கேற்கும் தமிழ்ப் படம் குற்றம் கடிதல்!

    By Shankar
    |

    கோவா: 'இந்தியன் பனோரமா' நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தேர்வாகி இருக்கும் 26 மாநில மொழிப் படங்களில், ஒரே தமிழ்த் திரைப்படமாக தேர்வாகியிருக்கிறது ‘குற்றம் கடிதல்'.

    ஜே.எஸ்.கே நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரம்மா இயக்கியுள்ளார்.

    டிசம்பர் மாதம் திரையில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படும் 'குற்றம் கடிதல்' தற்போது திரைக்கு வரும் முன்பே சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    பிரம்மா

    பிரம்மா

    கோவா திரைப்பட விழாவில் முதல் நாளே திரையிடப்பட்ட இந்தப் படம் குறித்து இயக்குநர் பிரம்மா கூறுகையில், "படத்தில் நடித்திருப்பவர்கள் எல்லோருமே புதுமுகங்கள் தான். இந்த படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கிற மாதிரி இருக்கும். மாஸ்டர் அஜய், சாய் ராஜ்குமார், பாவல் நவகீதன்'னு படத்துல நடிச்சிருக்குறவங்க எல்லாருமே அவங்க பங்களிப்பை ரொம்பவே சிறப்பா செஞ்சிருக்காங்க.

    கோவாவில்

    கோவாவில்

    நேத்து படம் திரையிட்ட பிறகு நிறைய பேருகிட்ட இருந்து பாஸிடிவ் கமாண்ட்ஸ் வந்துட்டு இருக்கு," என்றார்.

    ஏற்கெனவே ஜிம்பாப்வே திரை பட விழா, மும்பை திரைப்பட விழா ஆகியவற்றிலும் இந்தப் படம் பங்கேற்றுள்ளது.

    பெங்களூரு விழாவுக்கும் தேர்வு

    பெங்களூரு விழாவுக்கும் தேர்வு

    அடுத்து பெங்களூருவில் நடைபெற உள்ள 7ஆவது சர்வதேச திரை பட விழாவில் கலந்துக் கொள்ள தகுதி பெற்றுள்ளது குற்றம் கடிதல்.

    ஜேஎஸ்கே

    ஜேஎஸ்கே

    தயாரிப்பாளர் ஜேஎஸ்கே இதுகுறித்து கூறுகையில், 'ஒவ்வொரு விடியலும் எங்களுக்கு நல்ல சேதி தந்து கொண்டுதானிருக்கிறது. இந்த சந்தோஷத்தை சொல்லில் அடக்க முடியாது. தரமான படங்கள் தயாரிக்கும் பணியை நான் இப்போது பயிற்சியாக மேற்கொண்டு, வழக்கமாக மாற்றுவேன்,' என்றார்.

    English summary
    Kutram Kadithal is the only Tamil movie selected for Goa International Film Festival
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X