65 மில்லியனை கடந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் குட்டி பட்டாஸ் பாடல்!

சென்னை : குக் வித் கோமாளி அஸ்வின் குமார் நடிப்பில் வெளியான ஆல்பம் பாடல் குட்டி பட்டாஸ்.

பிகில் படத்தில் நடித்திருந்த ரெபா இதில் அஸ்வினுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த குட்டி பட்டாஸ் அல்பம் பாடல் தற்போது யூடியூபில் 65 பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

பல சீரியல்களில்

பல சீரியல்களில்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டுக் கொண்டு இருப்பவர் நடிகர் அஸ்வின் குமார். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

Recommended Video

Ashwin Emotional Live | Ashwin Sivangi | LONER OFFICIAL VIDEO SONG
ஓகே கண்மணி

ஓகே கண்மணி

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க பல ஆண்டுகளாக போராடி கொண்டிருக்கும் அஸ்வின் ஓகே கண்மணி மற்றும் ஆதித்ய வர்மா உள்ளிட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருப்பார். பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.

ரசிகர்கள் பட்டாளம்

ரசிகர்கள் பட்டாளம்

குக் வித் கோமாளி முதல் சீசனை தொடர்ந்து இரண்டாம் சீசன் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் போட்டியாளராக கலந்து கொண்ட அஸ்வினுக்கு தற்போது எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் ஆண் பெண் என பேதமில்லாமல் உருவாகியுள்ளனர். அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் அஸ்வின் பல ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார்.

65 மில்லியன்

65 மில்லியன்

அந்த வகையில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சந்தோஷ் இசையில் உருவான குட்டி பட்டாஸ் பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைத்து சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. பாடல் முழுவதும் கலர்ஃபுல்லாக இருக்க அஸ்வினுக்கு ஜோடியாக பிகில் ரெபா இதில் நடித்திருப்பார். சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு கோரியோகிராஃபி செய்துள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் ஆட்டம் போட வைத்த குட்டி பட்டாஸ் பாடல் இப்போது யூடியூபில் 65 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் அஸ்வின் குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X