சசிக்குமாரின் குட்டிப்புலி எத்தனை நாள் ஓடும்.. பல ஊர்களில் பரபரப்பு 'பெட்டிங்'!
சென்னை: வெள்ளித்திரையில் சீறிப்பாய 'குட்டிப்புலி' தயார்.
நாளை வெளியாக இருக்கும் சசிகுமாரின் குட்டிப்புலி, உண்மையில் ராஜபாளையத்தில் வாழ்ந்த ஒருவரின் நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது.
சுந்தர பாண்டியனில் ஜோடி போட்ட லெட்சுமிமேனன் ,குட்டிப்புலி மூலம் மீண்டும் சசிகுமாருடன் கை கோர்த்துள்ளார்.

அதென்ன ‘பேண்ட்’ காமெடி...
படம் முழுவதும் வேட்டியில் வரும் சசி, ஒரே ஒரு காட்சியில் மட்டும்`பேண்ட் போட்டு காமெடி பண்ணியிருக்காராம்

ஒய்ப் தான் லைப்பாம்...
மனைவியே வாழ்க்கை என்பதையே படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்காங்கலாம்.

டபுள்ஸ்...
படத்துக்கு ரெண்டு கிளைமாக்ஸ் ஷீட் பண்ணியுள்ளார்களாம். ஒன்று தாயை உயர்த்தி, மற்றொன்று தாரத்தை உயர்த்தி. ரசிகர்களின் ஆதரவைப் பொறுத்தே கிளைமாக்ஸ் முடிவாகுமாம்.

உடனடி வீடு...
ஷூட்டிங்கிற்காக ராஜபாளையத்தில் ஒரு வீட்டை எரித்து விட்டார்களாம். ஷூட்டிங் முடிந்த கையோடு வீட்டை திருப்பிக் கட்டி கொடுத்துவிட்டுத் தான் மறுவேலை பார்த்தார்களாம் படக்குழுவினர்.

குட்டிப்புலி ‘பெட்டிங்’...
கிரிக்கெட் சூதாட்டம் மாதிரி, சில ஊர்கள்ல ‘குட்டிப்புலி' சூதாட்டம் நடக்குதாம். அதாவது படம் எத்தனை நாள், எத்தனை தியேட்டர்ல ஓடும்... இந்த மாதிரி.

நடனப்புயலாகும் சசி...
படத்திற்காக ஸ்பெஷல் நடனம் கத்து கிட்ட சசி, ஒரு குத்துப்பாட்டுல புகுந்து விளையாடி இருக்காராம்.

சசியின் ‘சிலம்பாட்டம்’...
நடனம் மாதிரியே தலைவர் சிலம்பாட்டமும் சில மாதங்கள் கத்துக்கிட்டாராம். படத்துல சிலம்பாட்டத்துல பின்னி எடுத்திருக்காராம் சசி

ஸ்பெஷல் ப்ரிவியூ...
தன் திரையுலக குருவான பாலாவிற்கு மட்டும் தனியாக படத்தை திரையிட்டுக் காட்டி சபாஷ் வாங்கினாராம் சசி

க்ளைமாக்ஸ் ரகசியம்....
மற்ற ஹீரோக்கள் செய்யத் தயங்குற செயல, க்ளைமாக்ஸ்ல செஞ்சிருக்கார்னு சசிய யூனிட்டே தலையில தூக்கி வச்சு கொண்டாடுது. அது என்னானு நாளைக்கு தெரிஞ்சிடுமே...

க்ளைமாக்ஸ் ரகசியம்....
மற்ற ஹீரோக்கள் செய்யத் தயங்குற செயல, க்ளைமாக்ஸ்ல செஞ்சிருக்கார்னு சசிய யூனிட்டே தலையில தூக்கி வச்சு கொண்டாடுது. அது என்னானு நாளைக்கு தெரிஞ்சிடுமே...


Click it and Unblock the Notifications











