விஜய் வாய்ஸ் வரலன்னாலும்.. நீங்களும் இப்போ ‘குட்டி ஸ்டோரி’ பாடலாம்.. வெளியானது மாஸ்டர் ’கரோக்கி’!
சென்னை: மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி மற்றும் அந்த கண்ண பார்த்தாக்கா பாடல்களை நீங்களும் உங்கள் குரலில் பாட கரோக்கி மியூசிக்கை சோனி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
Recommended Video
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு இன்னும் பல நட்சத்திர பட்டாளத்துடன் மாஸ்டர் படம் உருவாகி இருக்கிறது.
அனிருத் இசையில் உருவான மாஸ்டர் ஆல்பம் வேற லெவலில் ஹிட் ஆன நிலையில், தற்போது வெளியாகி உள்ள கரோக்கி வைரலாகி வருகிறது.

எப்போதான் தியேட்டர்கள் திறக்குமோ
ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் திரைப்படம் ரிலீஸாகி இருந்தால், இந்நேரம், எத்தனை கோடி வசூல் செய்தது என்ற அப்டேட்களும், ரசிகர்கள் சண்டைகளும் களைகட்டி இருக்கும். அடுத்த பட அறிவிப்பும் அப்டேட்களையும் கேட்டு, ரசிகர்கள் இன்ப இம்சை கொடுக்க ஆரம்பித்து இருப்பார்கள். இப்போதைக்கு அனைத்து விஜய் ரசிகர்களின் ஒரே கவலை எப்போதான் தியேட்டர்கள் திறக்குமோ, மாஸ்டர் படம் ரிலீசாகுமோ என்பது மட்டும் தான்.

டீசராவது
அட்லீஸ்ட் டீசர் அல்லது டிரைலரையாவது நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு வெளியிடுவார்கள் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என விஜய் போட்ட ஆர்டரை முன்னிட்டு, மாஸ்டர் படத்தின் ஒரே ஒரு புதிய போஸ்டர் மட்டுமே வெளியாகி இருந்தது.

62 மில்லியன்
கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தின கொண்டாட்டத்தை தளபதி தின கொண்டாட்டமாக மாற்றும் வகையில் வெளியான குட்டி ஸ்டோரி பாடலின் லிரிக் வீடியோ, இதுவரை 62 மில்லியன் வியூஸ் கடந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வாத்தி கம்மிங் பாடலும் 57 மில்லியன் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் பாடலாம்
இந்நிலையில், தற்போது குட்டி ஸ்டோரி பாடலின் கரோக்கி மியூசிக்கை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் தற்போது வெளியிட்டு வைரலாக்கி வருகிறது. தளபதி விஜய் அளவுக்கு பாட முடியவில்லை என்றாலும், உங்க சொந்தக் குரலில் குட்டி ஸ்டோரியை பாடி மகிழ இந்த கரோக்கி வெர்ஷன் உதவும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அந்த கண்ண பார்த்தாக்கா
குட்டி ஸ்டோரி பாடலை தொடர்ந்து, அனிருத் இசையில், விக்னேஷ் சிவனின் ரொமன்டிக் வரிகளில், யுவன் சங்கர் ராஜாவின் குரலில் உருவான அந்த கண்ண பார்த்தாக்க எனும் மேஜிக் காதல் பாடலையும், ரசிகர்கள் முணுமுணுக்க கரோக்கி வெர்ஷனை வெளியிட்டு இருக்கிறது சோனி நிறுவனம். இரு கரோக்கி வெர்ஷன்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











