Don't Miss!
- News
செங்கோட்டையனா?.. "கமலாலய கசப்பு".. இதெல்லாம் யார் கேட்டது.. ஒரே நாளில் 2 ரியாக்ஷன்.. கவனித்த பாஜக
- Lifestyle
உங்கள் தலைமுடிக்கு புரோட்டீன் உடனே தேவை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
1 மில்லியன் லைக்ஸ்களை பெற்ற குட்டி ஸ்டோரி பாடல்! ட்விட்டரில் ட்ரெண்டிங்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் மாஸ்டர்.
Recommended Video
நீண்ட எதிர்பார்ப்பும், இடைவெளிக்கும் பின் வெளியான மாஸ்டர் எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பையே பெற்றது.
கோவிட்
ஒரு
சாதாரண
நோய்
அல்ல.
.எனக்கு
முன்னால்
மக்கள்
இறப்பதை
காண்கிறேன்..
கவுண்டமணி
உருக்கம்!
இந்த படத்தை XB Film Creators நிறுவனம் தயாரித்தது, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமா
கொரோனா தொற்று காரணத்தால் பெரிய இழப்பை சந்தித்திருந்த திரையரங்க உரிமையாளர்களின் நிலைமையே மாஸ்டர் திரைப்படம் புரட்டி போட்டது. வெளியான இடங்களில் எல்லாம் வசூல் வேட்டை நடத்தி தமிழ் சினிமாவிற்கு ஒரு கம்பேக்காக அமைந்தது மாஸ்டர் திரைப்படம்.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட்
தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டான இந்த படம் பலரின் பாராட்டுகளையும் அள்ளியது. விஜய், விஜய்சேதுபதியின் நடிப்பும் பெரிதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பலரது கவனத்தையும் மாஸ்டர் மூலம் தன் பக்கம் ஈர்த்து விட்டார்.

குவிந்த லைக்ஸ்
மாஸ்டர் படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் அடித்தது. Background score பல இடங்களில் புல்லரிக்க செய்தது. படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் இன்று வரையிலும் ட்ரெண்ட் ஆகவே உள்ளது.

1 மில்லியன் லைக்ஸ்
படத்தில் தளபதி விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் தற்போது யூ டியூபில் ஒரு மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளது. 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்ற 10வது தளபதி விஜயின் பாடல் என்ற பெருமையும் குட்டி ஸ்டோரி பாடலுக்கு கிடைத்துள்ளது. #KuttiStoryHits1MLikes என்ற ஹாஸ்டேகை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.