For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்த ஆண்டின் மிகச் சிறந்த பாடல் எது? ரசிகர்களை தாளம் போட வைத்த டாப் 7 பாடல்கள் இதோ!

  |

  சென்னை: 2020ம் ஆண்டுக்கு குட்பை சொல்லும் தருவாயில் உள்ளோம். இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்களின் மனங்களை ஏகப்பட்ட பாடல்கள் கொள்ளை கொண்டன.

  மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி, சூரரைப் போற்று காட்டுப் பயலே, டாக்டர் படத்தின் செல்லம்மா என ஏகப்பட்ட பாடல்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

  இந்த ஆண்டின் மிகச் சிறந்த டாப் 7 பாடல்கள் என்ன என்பது குறித்து இங்கே காண்போம்.

  சும்மா கிழி.. 70வது பிறந்தநாள்.. சூப்பர்ஸ்டாரின் காமன் டிபியை வெளியிட்டு பிரபலங்கள் வாழ்த்து!

  7. கதைப்போமா

  இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளிய ஓ மை கடவுளே படத்தில் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய "கதைப்போமா" பாடல் 2020ம் ஆண்டின் சிறந்த டாப் 7 பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது.

  6. தாராள பிரபு டோய்

  இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், தான்யா ஹோப் மற்றும் விவேக் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தாராள பிரபு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அனிருத் இசையமைத்து பாடிய தாராள பிரபு டோய் பாடல் ஏகப்பட்ட திருமணங்களில் இந்த ஆண்டு ஒலித்தது குறிப்பிடத்தகக்து. விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியது கூடுதல் சிறப்பு.

  5. தும்பி துள்ளல்

  இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், ஸ்ரீனிதி ஷெட்டி மற்றும் இர்பான் பதான் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் உருவான தும்பி துள்ளல் பாடல் இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

  4. ரகிட ரகிட ரகிட

  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படமும் கொரோனா காரணமாக அடுத்த ஆண்டு தான் ரிலீசாகிறது. ஆனால், இந்த ஆண்டு வெளியான அந்த படத்தின் ரகிட ரகிட ரகிட பாடல் வேற லெவலில் ஹிட் அடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் மற்றும் தீ சநாவுடன் இணைந்து பாடி அசத்தி இருந்தனர்.

  Master படத்தை ரசிகர்களுடன் பார்க்க Vijay முடிவு | Pongal Release 2021

  3. செல்லம்மா செல்லம்மா

  டிக் டாக் தடை இந்தியாவில் போட்டதும், அதை வைத்து அந்த நொடியே அனிருத் டாக்டர் படத்திற்காக போட்ட செல்லம்மா செல்லம்மா பாட்டு குட்டி சுட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் போட வைத்தது. இயக்குநர் நெல்சன், அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் பண்ணிய லிரிக் வீடியோ ரகளையை ரசிக்கவே ஏகப்பட்ட பேர் அந்த பாடலை பார்த்தது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத், ஜோனிடா காந்தி இந்த பாடலை பாடினர்.

  2. காட்டுப் பயலே

  இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் வெளியான காட்டுப்பயலே பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடல்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. சினேகன் வரிகளில் பாடகி தீ இந்த பாடலையும் பாடி இருந்தார். அபர்ணா பாலமுரளியின் அட்டகாசமான ஆட்டத்தால் இளம் பெண்களின் ஃபேவரைட் பாடலாகவே இந்த பாட்டு மாறி ஹிட் அடித்தது.

  1. குட்டி ஸ்டோரி

  2020ம் ஆண்டின் சம்மரில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மாஸ்டர் திரைப்படமும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான குட்டி ஸ்டோரி பாடல் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. அனிருத் இசையில், அருண் ராஜா காமராஜ் வரிகளில் தளபதி விஜய் இந்த பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலும் இந்த ஆண்டு வேற லெவலில் ஹிட்டானது.

  English summary
  From Kutti Story to Kaatu Payale top 7 best songs which were released this 2020 year in Tamil Cinema and catch audience hearts are listed here.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X