குட்டி தளபதி.. இது நிஜமாவே வேற லெவல்.. வைரலாகும் விஜய் பட ஃபேஸ் ஆப் போட்டோஸ்.. செம க்யூட்!
சென்னை: சமீபத்தில் ஹீரோக்களை ஹீரோயின்களாகவும், ஹீரோயின்களை ஹீரோக்களாகவும் மாற்றி ஃபேஸ் ஆப் மூலம் அழகுப் பார்த்தனர்.
இந்நிலையில், நடிகர்கள் ஜோடி உடன் இருக்கும் புகைப்படங்களையும் தற்போது க்யூட்டான குழந்தை பருவ புகைப்படங்களாக மாற்றி உள்ளனர்.
தளபதி விஜய் மற்றும் சமந்தாவின் செல்ஃபி புள்ள புகைப்படம் வேற லெவலில் வைரலாகி வருகிறது.
View this post on InstagramA post shared by Vignesh Shivan (@wikkiofficial) on
குட்டி விக்கி நயன்
நடிகை நயன்தாராவுக்கு கொரோனா பரவியது என வதந்திகள் கிளம்பிய நிலையில், குட்டி விக்னேஷ் சிவன் மற்றும் குட்டி நயன்தாராவின் ஃபேஸ் ஆப் வீடியோ வெளியாகி ரசிகர்களை ரசிக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து, ஃபேஸ் ஆப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின.

செல்ஃபி புள்ள
இந்நிலையில், தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான கத்தி படத்தின் செல்ஃபி புள்ள பாடலில் இடம்பெற்ற தளபதி விஜய் மற்றும் சமந்தாவின் புகைப்படத்தை அழகாக ஃபேஸ் ஆப் மூலம் க்யூட்டான குட்டி விஜய் மற்றும் சமந்தாவாக செதுக்கி உள்ள புகைப்படத்தை ரசிகர்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

யாரு பாத்த வேலைடா இது
மேலும், கத்தி படத்தில் இடம்பெற்ற ஏகப்பட்ட காட்சிகளையும் அழகாக அந்த செயலி மூலம் தளபதி ரசிகர்கள் செதுக்கி உள்ளனர். யாரு பாத்த வேலைடா இது என்கிற மீம் பேஜ் அந்த போட்டோக்களை வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. மறுபடியும் இளையதளபதியை பார்த்தாச்சு என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இது அதைவிட க்யூட்
இப்படி ஒரு ரூட் இருக்கா என்பதை அறிந்து கொண்ட விஜய் ரசிகர்கள், தளபதி விஜய்யின் ஒவ்வொரு படங்களின் புகைப்படங்களாக எடுத்து அந்த ஆப்பில் டிசைன் டிசைனாக எடிட் பண்ணி தங்களது கற்பனைத் திறனை காட்டி வருகின்றனர். காஜல் அகர்வாலுடன் இருக்கும் இந்த க்யூட் போட்டோவும் செம வைரல்.
Recommended Video

உற்சாகத்தில் ரசிகர்கள்
அக்டோபர் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் தியேட்டர்கள் 50 சதவீதம் இருக்கைகளுடன் திறக்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், தளபதி ரசிகர்கள் செம உற்சாகமாக அதனை கொண்டாடி வருகின்றனர். சீக்கிரமே மாஸ்டர் படத்தை தியேட்டரில் தெறிக்க விட காத்துக் கொண்டு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











