விஜய்யோட என் மகன் நடிக்கணும்.. குட்டி விக்ரமோட அப்பா -அம்மா ஆசை!

சென்னை : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் விக்ரம் படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் கடந்த 4 நாட்களில் 175 கோடி ரூபாய் வசூலை உலகளவில் வசூலித்துள்ளது.

இந்த படத்தில் ஒவ்வொரு குட்டி கேரக்டர்களையும் சிறப்பாக பயன்படுத்தியிருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

கமலின் விக்ரம் படம்

கமலின் விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் என மல்டி ஸ்டாரர் படமாக கடந்த 3ம் தேதி வெளியாகியுள்ள படம் விக்ரம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படம் ரசிகர்களின் சிறப்பான வரவேற்புடன் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

குட்டி விக்ரம் தர்ஷன்

குட்டி விக்ரம் தர்ஷன்

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிரட்டலாக அமைத்திருந்தார் லோகேஷ். இதேபோல படத்தின் திரைக்கதையும் மிரட்டலாக அமைந்திருந்தது. மேலும் படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் சிறப்பாக பயன்படுத்தியிருந்தார். அதில் குறிப்பாக கமலின் பேரனாக குட்டி விக்ரமாக நடித்திருந்த தர்ஷன் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

கமலின் தோளில் தர்ஷன்

கமலின் தோளில் தர்ஷன்

தர்ஷனை மையமாக வைத்தே முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. தர்ஷன் கமலின் தோளிலேயே இருப்பதாக பல காட்சிகள் காணப்பட்டன. அவனிடமே கமல் அதிகமாக பேசுவதாகவும், அதற்கு அவனின் ரியாக்ஷன் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

தர்ஷன் அப்பா விருப்பம்

தர்ஷன் அப்பா விருப்பம்

இந்நிலையில் தன்னுடைய மகன் சினிமாவில் இருப்பதையே தான் விரும்புவதாக தர்ஷனின் தந்தை தெரிவித்துள்ளார். தற்போது தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தர்ஷனின் அம்மாவும் இந்தப் பேட்டியின்போது உடனிருந்தார். தொடர்ந்து பேசிய தர்ஷனின் அப்பா, தன்னுடைய மகன் அடுத்ததாக யாருடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையையும் வெளிப்படுத்தினார்.

மகன் விஜய்யுடன் நடிக்க ஆசை

மகன் விஜய்யுடன் நடிக்க ஆசை

தன்னுடைய மகன் அடுத்ததாக நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். அது மட்டுமே தன்னுடைய ஒரே ஆசை என்றும் அவர் கூறியுள்ளார். அவருடைய கனவு கண்டிப்பாக நிறைவேறும். அந்த அளவில் தனது முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்துள்ளார் குட்டி விக்ரம் தர்ஷன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X