தமிழ் ராக்கர்ஸ் பற்றிய கதையில் நடிக்கும் அருண் விஜய்.. மீண்டும் இணையும் குற்றம் 23 கூட்டணி!
சென்னை : இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் முதல்முறையாக இணைந்த குற்றம் 23 சற்று தாமதமாக வெளியாகி இருந்தாலும் ரசிகர்களால் இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து இப்பொழுது பார்டர் என்ற படத்தில் பணியாற்றி வருகின்றனர். பார்டர் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து மிக விரைவில் ரிலீசாக உள்ளது. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா கெஸன்ட்ரா நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி அருண் விஜய் மற்றும் இயக்குனர் அறிவழகன் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாகவும் இந்த முறை தமிழ் ராக்கஸ் பற்றிய கதை களத்தில் வெப் சீரிஸ் உருவாகிறது எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.

திருப்புமுனையாக அமைந்தது
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் என்ற அடையாளம் இருந்தாலும் ஆரம்ப காலகட்டங்களில் அருண்விஜய் நடித்த திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக வெற்றி பெற்றதில்லை. இருப்பினும் தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான கதைகளில் நடித்து வந்த அருண்விஜய்க்கு தொடர் தோல்விகள் மற்றும் அவமானங்கள் கிடைக்க ஒருகட்டத்தில் நடிப்பை விட்டு வெளியேறி விடலாம் என நினைத்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஆக்சன் ஹீரோவாக
பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அருண் விஜய், அஜித் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். உடம்பை தாறுமாறாக ஏற்றி மின்னல் வேகத்தில் பாயும் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் அருண் விஜய்யின் நடிப்பை பார்த்து பிரமித்த ரசிகர்கள் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர். என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தாலும் அவரின் பிரமாதமான நடிப்பைப் பார்த்து பிரமித்துப் போயினர். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அருண் விஜய்க்கு கிடைக்க இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் ஒப்பந்தமாகி தவிர்க்க முடியாத ஆக்சன் ஹீரோவாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.

குற்றம் 23
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் அறிவழகன். ஈரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து வல்லினம் என்ற படத்தையும் இயக்கி இருந்தார். அதைத் தொடர்ந்து அருண் விஜய்யுடன் கூட்டணி அமைத்து குற்றம் 23 என்ற படத்தை இயக்கினார். மருத்துவத்துறையில் நடக்கும் க்ரைமை அடிப்படையாகக் கொண்டு உருவான குற்றம் 23 திரைப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்க மஹிமா நம்பியார் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் சற்று தாமதமாக வெளியானாலும் மிகச்சிறந்த த்ரில்லர் படமாக இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இரண்டாவது முறையாக இணைந்து
குற்றம் 23 மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அறிவழகன், அருண் விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து பார்டர் என்ற படத்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த வருடமும் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதில் அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா கெஸன்ட்ரா நடித்திருக்க குற்றம் 23 வெற்றிக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் கூட்டணி இணைவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

வில்லேஜ் கதைக்களத்தில்
தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அருண் விஜய் சினம் அக்னி சிறகுகள் ஆகிய படங்களை தொடர்ந்து முதல் முறையாக ஹரி இயக்கத்தில் இணைந்து நடித்து வரும் படத்திற்கு AV33 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க வில்லேஜ் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி இதில் அருண்விஜய்க்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்க படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Recommended Video

தமிழ் ராக்கர்ஸ் பற்றிய கதையில்
அருண் விஜயின் திரை வாழ்க்கையில் குற்றம் 23 தவிர்க்க முடியாத தனி இடத்தை பிடித்திருக்க இந்தக் கூட்டணி இப்பொழுது மூன்றாவது முறையாக இணைய உள்ளது. இந்த முறை வெப் சீரிஸாக உருவாகிறது. டெக்னாலஜி நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே போக அதை பயன்படுத்தி திரைப்படங்களை பைரஸி வாயிலாக வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த பலரும் முயன்று முடியாமல் போக இன்றளவும் படங்கள் வெளியான முதல் நாளே பைரஸி மூலம் திருட்டுத்தனமாக படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

புதிய வெப்சீரிஸில் அருண் விஜய்
இது திரைத்துறைக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை அடிப்படையாக வைத்து அறிவழகன் இயக்கும் புதிய வெப்சீரிஸில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் இந்த வெப் சீரிஸ் சோனி லைவ் ஓடிடித்தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்க இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











