நீண்ட நாள் கனவான புது கார் வாங்கிய குட்டி ஜானு... ஒரு குட்டி ரவுண்ட் போவோமா!
சென்னை: விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்து அறிமுகமானவர் நடிகை கௌரி கிஷன்
அதைத்தொடர்ந்து மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்
இப்பொழுது கதாநாயகியாக பல படங்களில் நடித்து வரும் கௌரி கிஷன் நீண்ட நாள் கனவான புது கார் வாங்கியுள்ள வீடியோவை மட்டற்ற மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்

திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரமாக
இயக்குனர் பிரேம் இயக்கத்தில் வெளியான 96 திரைப்படம் விஜய் சேதுபதி திரிஷாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. பள்ளியில் காதலர்களாக இருக்கும் இருவரும் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படையாக சொல்லாமலேயே காதலிக்கின்றனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு இருவரும் கெட் டு கெதர் மூலமாக இணையும் போது காதலை அன்பாக பரிமாறிக் கொள்ளும் அழகிய படமாக வெளியான 96 திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரமாக குட்டி ஜானு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் நடிகை கௌரி கிஷன் . முதல் படத்திலேயே நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

ரசிகர்களின் ஃபேவரைட் குட்டி ஜானு
தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வரும் கௌரி கிஷன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தியிருப்பார். கௌரிக்கு முக்கியத்துவம் கொடுத்து மாஸ்டர் படத்தில் பல காட்சிகள் வைக்கப்பட்டு கைத்தட்டல்களை பெற்றிருப்பார். மாஸ்டரை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து கர்ணன் திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பார்

தமிழிலும் விரைவிலேயே கதாநாயகியாக அறிமுகம்
தமிழில் இதுவரை பல படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை கதாநாயகியாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் மலையாளத்தில் மர்கம்களி, அனுகிரகீதன் ஆண்டனி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழிலும் மிக விரைவிலேயே கதாநாயகியாக நடிக்க உள்ள கௌரி கிஷனுக்கு அதற்குள்ளாகவே தெலுங்கில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிகிறது. இப்பொழுது ஸ்ரீதேவி சோபன் பாபு என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்
Recommended Video


நீண்ட நாள் கனவான புது கார்
தமிழ்,தெலுங்கு,மலையாளம் என மூன்று மொழிகளிலும் தென்னிந்திய ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக உள்ள கௌரி கிஷன் தனது நீண்ட நாள் கனவான புது கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஷோரூமில் கார் வாங்கிய சந்தோஷத்துடன் எடுத்த வீடியோவை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்க அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











